»   »  கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கய்யா: புலி பர்ஸ்ட் லுக்கை கிண்டல் செய்யும் 'தல' ரசிகர்கள்

கிளம்பிட்டாங்கய்யா, கிளம்பிட்டாங்கய்யா: புலி பர்ஸ்ட் லுக்கை கிண்டல் செய்யும் 'தல' ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்யின் புலி பட பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ள நிலையில் அதை கிண்டல் செய்து அஜீத் ரசிகர்கள் உள்ளிட்டோர் ட்வீட் செய்வதால் #ROFLPuliFL என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, ஸ்ரீதேவி, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் புலி. படத்தில் விஜய் வித்தியாசமான கெட்டப்பில் வந்து ரசிகர்களை அசர வைக்க உள்ளார் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.


அதை பார்த்த அஜீத் ரசிகர்கள் உள்ளிட்டோர் ட்விட்டரில் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் #ROFLPuliFL என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிக் கொண்டிருக்கிறது.


மைண்ட் வாய்ஸ்

சிம்புதேவன் மைண்ட் வாய்ஸ்.. இவனலாம் வச்சி இப்டிதான்டா ஃபர்ஸ்ட் லுக் எடுக்க முடியும் முடிஞ்சா பாருங்க இல்லாட்டி போங்கடா :D #ROFLPuliFL என அச்சுதபாலன் ட்வீட் செய்துள்ளார்.


டிரெண்ட்

இந்திய சினிமா வரலாற்றிலேயே முதல்முறையாக பர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ஒரு படம் இவ்வளவு கிண்டல் செய்யப்படுகிறது. #Puli #ROFLPuliFL #trending என கோகு என்பவர் தெரிவித்துள்ளார்.


புலி

புலி காமெடி பர்ஸ்ட் லுக்கை பார்த்து உண்மையான புலியே மயங்கிவிட்டது #ROFLPuliFL #SaveTigers என கிரண் துவ்வுரி ட்விட்டரில் கூறியுள்ளார்.


பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக் நஹி பர்ஸ்ட்ல இருந்தே இதே லுக் தான் போலோ என ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் வீரபத்திரன்.


ஸ்ருதி

மேடம் ஸ்ருதி பிரியாணி துன்றீங்க ஆனால் புலி பர்ஸ்ட் லுக்கை ஷேர் பண்ண மாட்டேங்கிறீங்க #ROFLPuliFL என்று தினேஷ் என்பவர் ட்வீட்டியுள்ளார்.


மக்கள் மைண்ட் வாய்ஸ்

மக்கள் மைண்ட் வாய்ஸ்

இந்த அஜீத், விஜய் ரசிகர்கள் சண்டை எப்பொழுது தான் ஓயுமோ தெரியலையே. ட்விட்டர், ஃபேஸ்புக்கில் இப்படி அடித்துக் கொள்கிறார்களே என்பது மக்களின் மைண்ட் வாய்ஸ் ஆகும்.


English summary
As Ajith fans are making fun of Vijay's Puli first look, #ROFLPuliFL is trending on twitter.
Please Wait while comments are loading...