»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திடீர் பரபரப்பை ஏற்படுத்திய ரகுவரன்-ரோகிணி தம்பதியருக்குள் சமரசம் ஏற்பட்டுள்ளது.

போதை வஸ்துக்களுக்கு அடிமையான ரகுவரனை திருத்தி திருமணம் செய்து கொண்டார்ரோகிணி. கல்யாணத்திற்குப் பிறகு புது மனிதனாக உலவி வந்த ரகுவரன், சமீபகாலமாக மறுபடியும்போதை வஸ்துக்களை நாட ஆரம்பித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த ரோகிணி, திடீரென்று தன் குழந்தையுடன் ரகுவரனைப் பிரிந்து சென்றார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத ரகுவரன் ஆடிப் போய் விட்டார். ரோகிணி இல்லாவிட்டால் கூடபரவாயில்லை. எனக்கு என் குழந்தை வேண்டும் என்று புலம்ப ஆரம்பித்தார். பத்திரிகைகளுக்குக்கொடுத்த பேட்டிகளில் கண்ணீர் விட்டார்.

மேலும் மீண்டும் தீவிரமாக போதை வஸ்துக்களை சாப்பிட ஆரம்பித்தார். இதனால் உடல் நலம்பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார். திடீரென்று சினிமாவுக்குமுழுக்குப் போடப் போவதாகவும் அறிவித்தார்.

ரகுவரன்-ரோகிணியின் இந்த திடீர் பிரிவால் அதிர்ச்சியடைந்த அவர்களது நெருங்கிய நண்பர்கள்,அவர்களை இணைக்கும் முயற்சிகளில் இறங்கினர். நடிகர் நாசரின் மனைவி கமீலா, நடிகை ரேவதிஆகியோர் ரோகிணியிடம் பேசினர்.

அதே போல நடிகர் சத்யராஜ், இயக்குநர் சரண் உள்ளிட்ட சிலர் ரகுவரனிடம் பேசினர். இதன்தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரகுவரனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் சில நிபந்தனைகளுக்கு அவர் கட்டுப்பட வேண்டும்.ரகுவரனின் பாதுகாப்புக்காகத்தான் இந்த நிபந்தனைகள் என்று ரோகிணி கூறியிருக்கிறார்.

ரோகிணி என்ன சொன்னாலும் ஏற்றுக் கொள்கிறேன் என்று ரகுவரனும் கூறிவிட்டாராம். எனவேவிரைவில் ரகுவரனின் வீட்டுக்கே செல்லவிருக்கிறாராம் ரோகிணி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil