»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டைனோசர் காலத்தில் இருந்து ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நடிகை ரோஜாவும் இயக்குனர் செல்வமணியும் இன்று திருமணம் செய்துகொண்டனர்.

திருப்பதியில் நடந்த இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை வகித்தார். மேலும் ஆந்திர மாநிலஅமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல.ஏக்கள் மற்றும் தமிழக, ஆந்திர சினிமா உலப் பிரமுகர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.

நேற்று திருச்சானூரில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. அதிலும் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் பங்கேற்கவில்லை. சென்னை ராஜாஅண்ணாமலைபுரத்தில் இமேஜ் கலையரங்கில் நாளை நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சியில் ஜெயலலிதா உள்ளிட்ட தமிழக வி.வி.ஐ.பிக்கள்பங்கேற்கின்றனர்.

11 ஆண்டுகளுக்கு முன் செல்வமணி தன் செம்பருத்தி படத்தை இயக்கியபோது ஆரம்பித்த காதல் இது. ஆந்திராவில் இருந்து வந்து தமிழில்ரோஜா அறிமுகமானது அந்தப் படத்தில் தான்.

அதன் பிறகு பல்வேறு இன்னல்கள், துயரங்கள், செக் மோசடிகள், கண்ணீர், படத் தோல்விகளைத் தாண்டி இந்தக் காதல் இன்றுதிருமணத்தைத் தொட்டுள்ளது.

திருமணத்துக்குப் பின் தெலுங்கு தேசம் கட்சியில் ரோஜா சேரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந் நிலையில் அவரது வரவேற்பு மற்றும்திருமண நிகழ்ச்சிகளில் சந்திரபாபு நாயுடு கலந்து கொண்டதும் பெருமளவிலான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டதும் முக்கியத்துவம்பெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil