»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நீண்ட ஆண்டுகள் காதலர்களாகவே இருந்து வரும் நடிகை ரோஜாவும் இயக்குநர் செல்வமணியும் வரும் செப்டம்பர்11ம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர்.

"செம்பருத்தி" படத்தின் மூலம் ரோஜாவை திரையுலகிற்கு அறிமுகப்படுத்தியவரே செல்வமணி தான்.

அதன் பிறகு மெள்ள மெள்ள அவர்கள் இருவருக்கும் இடையே காதல் அரும்பத் தொடங்கியது. நாங்கள்காதலிக்கிறோம், விரைவில் திருமணமும் செய்து கொள்ளப் போகிறோம் என்று பல ஆண்டுகளாகவே அவர்கள்கூறி வந்தனர்.

ஆனால் இன்று வரை திருமணம் நடந்த பாடில்லை. இடையிடையே ரோஜா-செல்வமணியின் காதல் முறிந்துவிட்டது என்றும் செய்திகள் வெளி வந்து கொண்டு தான் இருந்தன.

சமீபத்தில் கூட செக் மோசடி வழக்கு தொடர்பாக மன நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் ஒரு நாள் முழுக்கஇருக்க வேண்டும் என்று ரோஜாவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை ஏற்று மன நலக் குழந்தைகளுடன் ஒருநாள் முழுவதையும் செலவழித்தார் ரோஜா.

இதற்கிடையே விஜய் டி.வியில் "நதி எங்கே போகிறது?" என்ற தொடரிலும் மெயின் கேரக்டரில் ரோஜா நடித்துவருகிறார்.

இந்நிலையில் ரோஜா-செல்வமணி திருமணம் குறித்து இரு வீட்டாரும் சந்தித்துப் பேசினர். அதன்படி வரும்செப்டம்பர் 11ம் தேதி இவர்களுடைய திருமணம் திருப்பதியில் வைத்து நடைபெறவுள்ளது. திருமணத்திற்குஇருவரும் முழு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

திருமணத்தில் இவர்களுடைய குறிப்பிட்ட உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். ஆனால்திரையுலகினருக்காக சென்னையில் பிரம்மாண்டமான திருமண வரவேற்பு விழாவுக்கும் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

முன்னதாக அடுத்த மாதம் (ஜூலை) ரோஜா-செல்வமணி திருமண நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இதற்கிடையே சமீபத்தில் காரைக்குடி அருகே உள்ள பாதரக்குடி முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகவிழாவில் ரோஜாவும் செல்வமணியும் ஜோடியாகக் கலந்து கொண்டனர். விழா முடிந்ததும் இருவரும் ஒரேகாரிலேயே சென்னை திரும்பினர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil