»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரையிலும் பாண்டிச்சேரியிலும் நடிகர் அஜீத் நடித்த வில்லன் படத்தைப் பார்ப்பதற்கு திரண்ட ரசிகர்கள் அடிதடியில்இறங்கியதால் போலீஸார் அவர்களை தடியடி நடத்திக் கலைத்தனர்.

மதுரை திருநகரில் ஒரு தியேட்டரில் அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் கூடிவிட்டனர். நூற்றுக்கணக்கில் வரிசையில்நின்றிருந்தனர். தீபாவளியையொடடி புல்லாக ஊத்திக் கொண்டு வந்திருந்த சில ரசிகர்கள் வரிசையில் நிற்காமல்நேராக கவுண்டரை நோக்கிச் செல்ல இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சோடா பாட்டில்களும் கற்களும் பறந்தன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கும்பலைக் கலைத்தனர்.

அதே போல பாண்டிச்சேரி ஆனந்தா தியேட்டரில் வில்லன் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப்படத்தின் முதல் காட்சியைப் பார்ப்பதற்கு ரசிகர்கள் திரண்டனர். கூட்டம் அதிகம் இருந்ததால் பலருக்கு டிக்கெட்கிடைக்கவில்லை.

இதையடுத்து ரசிகர்கள் கலாட்டாவில் இறங்கினர். தியேட்டர் மீது கல் வீச்சு நடத்தினர். இதில் பொது மக்கள் சிலரும்காயமடைந்தனர். இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தி அந்த ரசிகர் கூட்டத்தைக் கலைத்தனர்.

அதன் பிறகு அமைதியான ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்று கலாட்டாவைத் தொடர்ந்தனர்.

ஒரு பாடலை மீண்டும், மீண்டும் போடச் சொல்லி ரசிகர்கள் வற்புறுத்தியதால், கலாட்டா ஏற்பட்டது. இதில் பலசீட்கள் கிழிக்கப்பட்டன. ஆபரேட்டர் அறைக்குள்ளும் ரசிகர்கள் புகுந்து ரகளை செய்தனர்.

இதையடுத்து மீண்டும் போலீஸார் வந்து தியேட்டருக்குள்ளேயே தடியடி நடத்தினர். இதுதொடர்பாக 6 பேர்கொண்ட ரசிகர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil