»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ரோஜாவுக்கு எதிராக பைனான்சியர் போத்ரா நீதிமன்றத்தில் தாக்கல்செய்திருந்த இடைக்கால மனு திங்கள்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகை ரோஜாவின் சகோதரர் குமாரசாமி ரெட்டி திரைப்படம் எடுப்பதற்காகபோத்ராவிடம் கடன் வாங்கியிருந்தார். அந்த கடன் தொகையை திருப்பி தருவதாகநடிகை ரோஜா உத்தரவாதம் அளித்திருந்தார். ஆனால் சொன்னபடி ரோஜா கடன்தொகையை திரும்ப செலுத்தவில்லை. இதனால் போத்ரா நீதிமன்றத்தில் வழத்குதொடர்ந்தார்

அவர் ரோஜா தனக்கு கடன் தொகையை திரும்ப தராததால் அவர் நடிக்கும் படத்தின்சம்பளப் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும், அவர் நடித்துள்ள சிலபடங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும் குமாரசாமி ரெட்டிதயாரித்தலத்தி சார்ஜ் படத்தை டப்பிங் செய்து வெளியிட தடை விதிக்க வேண்டும்

எனவும் கோரியிருந்தார்.

இந்நிலையில் நடிகை ரோஜாவுக்காக, சாலிக்கிராமத்தில் இருக்கும் தனது ரூ 30 லட்சம்மதிப்புள்ள சொத்தை பிணையமாக அளிப்பதாக இயக்குனர் செல்வமணிநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து பைனான்சியர் போத்ரா தரப்பில் தாக்கல் செய்யப்பட்டஇடைக்கால மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

மேலும், ரோஜாவின் சம்பளப் பணத்தை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றமனுவையும் தள்ளுபடி செய்தார். லத்திசார்ஜ் படத்தை டப்பிங் செய்து வெளியிடக்கூடாது என்ற மனுவும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இந்த படத்தை தமிழ், மலையாளத்தில் டப்பிங் செய்து வெளியிடலாம். இதுதொடர்பான ஒப்பந்தங்கள் காசோலை மூலமாகவோ அல்லது டிமாண்ட் டிராப்ட்மூலமாகவோ தான் செய்யப்பட வேண்டும் என நீதிபதி ராமமூர்த்தி உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil