»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜா - இயக்குனர் செல்வமணி ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடந்தது.

ரோஜா அறிமுகமான "செம்பருத்தி" படத்தின் படப்பிடிப்பின் போதே அவருக்கும் அப்படத்தின் இயக்குனரானசெல்வமணிக்கும் இடையே காதல் அரும்பத் தொடங்கியது.

இதையடுத்து பல இன்னல்களுக்கும் இடையே அவர்கள் காதலும் தொடர்ந்து வளர்ந்து கொண்டிருந்தது. செக்மோசடி வழக்குகள் தொடர்பாக அடிக்கடி ரோஜா நீதிமன்றத்திற்கும் வீட்டுக்குமாக அலைந்து கொண்டிருந்தார்.

இந்தத் தொல்லைகள் காரணமாக ஒரு முறை தற்கொலைக்கும் முயன்றார் ரோஜா. மற்றொரு முறை நீதிமன்றஉத்தரவின் படி குழந்தைகள் மனநலக் காப்பகத்தில் ஒரு நாள் முழுவதும் அவர்களுடன் செலவிட்டார் அவர்.

இந்நிலையில் சமீபத்தில் பத்திரிக்கை நிருபர்களைச் சந்தித்த ரோஜா, அவர்களிடம் மனம் விட்டுப் பேசினார்.தன்னைப் பற்றி தவறான தகவல்களை வெளியிட்டு வருவதற்காக நிருபர்களைக் கடிந்து கொண்ட ரோஜா, மற்றமனிதர்களைப் போல் தன்னையும் வாழ விடுங்கள் என்று உருக்கமாகவும் கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே ரோஜா வீட்டிலும் செல்வமணி வீட்டிலும் அவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் செய்துவைப்பது குறித்து பேசி வந்தனர்.

அதன்படி நேற்று (திங்கள்கிழமை) காலை 10 மணிக்கு ரோஜா-செல்வமணி திருமண நிச்சயதார்த்தம் சென்னைகிண்டியில் உள்ள ராயல் லே மெரிடின் ஹோட்டலில் நடந்தது.

தெலுங்கு முறைப்படி நடைபெற்ற இந்த நிச்சயதார்த்தத்தின் போது ரோஜாவின் பெற்றோரும் செல்வமணியின்பெற்றோரும் தாம்பூலத் தட்டுக்களை மாற்றிக் கொண்டனர்.

இயக்குனர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகரன், பார்த்திபன், ஆர்.சி. சக்தி, ஆர்.வி. உதயகுமார், ஆர்.சுந்தரராஜன், தயாரிப்பாளர்கள் இப்ராகிம் ராவுத்தர், ஏ.எல். அழகப்பன், சுப்பு பஞ்சு, செவன்த் சேனல் நாராயணன்மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரோஜாவையும்செல்வமணியையும் வாழ்த்தினர்.

ஆகஸ்ட் 21ல் திருமணம்

இதற்கிடையே வரும் ஆகஸ்டு 21ம் தேதி காலை 6 மணிக்கு திருப்பதி அருகே உள்ள திருச்சானூர் கோவிலில்ரோஜா-செல்வமணி திருமணம் நடைபெறவுள்ளது.

அதற்கு மறுநாள் மாலை 6 மணிக்கு சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் ஹாலில் இவர்களுடையதிருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil