»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

"செக்ஸ்" டாக்டர் பிரகாஷுடன் தன்னைத் தொடர்புபடுத்தி வரும் தகவல்களால் பயந்து போன நடிகை ரோஜாதற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

தமிழ் திரையுலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் ரோஜா. அவரும் "செம்பருத்தி"யில் அவரைஅறிமுகப்படுத்திய டைரக்டர் செல்வமணியும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். இவர்களின் திருமணம்தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.

"அதிரடிப்படை" என்ற பெயரில் சொந்தப்படத்தை எடுத்து நஷ்டமடைந்த ரோஜா, கடன் தொல்லையிலிருந்துமீளாமல் தத்தளித்து வருகிறார்.

திருமணம் தள்ளிப் போவதால் மனம் நொந்து போயிருக்கும் ரோஜா, தற்போது ஆபாசப்பட டாக்டர் பிரகாஷுடன்தன்னைத் தொடர்பு படுத்தி வரும் தகவல்களால் மனமுடைந்து போயிருக்கிறார்.

பிரகாஷின் பண்ணை வீட்டுக்கு ரோஜாவும், செல்வமணியும் சென்றதாக தகவல்கள் கசிந்துள்ளன. அப்போதுஅவரே அறியாமல் ப்ளூபிலிம் விவகாரத்தில் சிக்கிக் கொண்டார் என்ற தகவல் சில நாட்களாக சினிமாவட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

மேலும், போலீஸிடம் இது தொடர்பான படங்களை பிரகாஷ் கொடுத்து விடுவார் என்ற பயம் ரோஜாவுக்குஏற்பட்டிருக்கிறது. இதனால் தனது இமேஜ் பாழாகிவிடும், சினிமா உலகிலேயே தலை காட்ட முடியாது, போலீஸ்,நீதிமன்றம் என்று அலைய வேண்டியிருக்கும் என்று ரோஜா கருதினார்.

இதனால் மனம் குழம்பிய நிலையில் காணப்பட்ட ரோஜா தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்குதள்ளப்பட்டிருக்கிறார்.

திடீரென்று விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்த அவரை, உறவினர்கள் சென்னை, அடையாறிலுள்ள தனியார்மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதை யாருக்கும் தெரியாமல் மூடி மறைத்து விட்டனர்

3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த ரோஜா, சமீபத்தில்தான குணமடைந்து வீட்டுக்கு சென்றார். இது குறித்து அவரதுகாதலர் செல்வமணி கூறுகையில்,

கடந்த 93ம் ஆண்டு அதிரடிப்படை படத்தின் சண்டைக்காட்சியின் போது காலில் அடிப்பட்டு ஆபரேஷன் நடந்தது.

மீண்டும் அதே இடத்தில் வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்று செல்வமணிகூறினார்.

ரோஜாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் கூறுகையில், ரோஜா விஷம் குடித்து உண்மையல்ல, அவரது கர்ப்பப்பையில்கட்டி இருந்தது. ஆனால் லேப்ராஸ்கோப்பி சிகிச்சை மூலம் கட்டி அகற்றப்பட்டது என்று கூறினார்.

டாக்டரும், செல்வமணியும் முரண்பட்ட கருத்துக்களை கூறியதிலிருந்தே விஷயத்தை மூடி மறைக்க முயற்சிகள்நடப்பதாக பேசப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil