»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமா இயக்குனர் செல்வமணிக்கும், தனக்கும் இடையேயான காதல் மீண்டும் முறிந்து விட்டதாக பிரபல நடிகைரோஜா கூறியுள்ளார்.

ரோஜாவை செம்பருத்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தியவர் செல்வமணி. அப்போதிருந்தே கடந்த11 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வருகின்றனர்.

இருவருக்குமே பணப்பிரச்சனை இருந்து வந்ததால் தங்களது திருமணத்தை தள்ளி போட்டுள்ளதாக இருவருமேகூறி வந்தனர். ஆனால் இருவரும் திருமணம் செய்துக் கொள்ளாமலேயே ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் டாக்டர் பிராகாஷ் ஆபாசப்படத்தில் நடித்ததாக வந்த வதந்தி, கமலுடன் தகராறு, வழக்கம் போல் செக்மோசடி வழக்கால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றார் ரோஜா.

ரோஜாவின் மார்க்கெட்டும் சரிந்தது. இதனால் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ள சொல்லிவற்புறுத்தியுள்ளார். ஆனால் செல்வமணி இன்னும் கொஞ்ச நாட்கள் போகட்டும் என்று தட்டிக் கழித்து வந்துள்ளார்.

இந்நிலையில் தான் செல்வமணி தனது புதிய பட அறிவிப்பை வெளியிட்டார். அந்த படத்தில் ரோஜாவைநடிக்கும்படி கேட்டுள்ளார். மேலும் படத்திற்கு பைனான்ஸ் செய்யவும் கேட்டுள்ளார்.

இதற்கு ரோஜா மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டது. இதனால்செல்வமணியும் மனமுடைந்த நிலையில் யாரிடமும் சொல்லாமல் மலேஷியா சென்று விட்டார்.

இருவரும் திருமணம் செய்யும் முடிவையும் கைவிட்டுவிட்டதாகத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil