»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜா ஒரு நாள் முழுவதும் மன நலக் காப்பகத்தில் தங்கியிருக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோத்ரா என்பவரிடம் ரோஜா லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். இந்தக் கடன் தொகையை 4 லட்சம் ரூபாய்அபராதத்துடன் திருப்பிச் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குத் தொடர்பாக நீதிமன்றத்தை அவமதித்து ரோஜா சில கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். கோத்ராதன்னை வேண்டுமென்றே கொடுமைப்படுத்துவதாகவும் கூறியிருந்தார்.

இந் நிலையில் அபராதத் தொகையை நீதிமன்றத்தில் காலதாமதமாக செலுத்தினார்.

இதையடுத்து ரோஜாவுக்கு மிக வித்தியாசமான தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார் நீதிபதி கற்பக விநாயகம்.

அவர் அளித்த தீர்ப்பில்,

நீதிமன்றத்தை அவமதித்த ரோஜா ஒருநாள் முழுவதும் மன நலக் காப்பகத்தில் தங்க வேண்டும். அந்த காப்பகத்தில்உள்ளவர்களுக்கு ஒரு நாள் உணவையும் உடைகளும் வழங்க வேண்டும்.

அந்த காப்பகத்துக்கு ரூ. 10,000 நன்கொடையும் தர வேண்டும். இந்த உத்தரவுகளை ஒரு மாதத்துக்குள்நிறைவேற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil