»   »  அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே: மணிரத்னம் ஹீரோயின்

அதுக்கு ஆசை இருக்கு ஆனால் தைரியம் இல்லையே: மணிரத்னம் ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: படம் இயக்கும் ஆசை உள்ளது ஆனால் அதற்கு தைரியம் இன்னும் வரவில்லை என்று நடிகை மது தெரிவித்துள்ளார்.

மணிரத்னத்தின் ரோஜா படம் மூலம் பிரபலமானவர் நடிகை மது. ரோஜா படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆகியும் அதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

இது குறித்து மது பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

25 ஆண்டுகள்

25 ஆண்டுகள்

ரோஜா படம் வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனக்கு பிடித்த கதாபாத்திரங்கள் பல உள்ளன. ஆனால் ரோஜா எனக்கு ஸ்பெஷலான படம் ஆகும். இந்த படத்தை தான் 25 ஆண்டுகள் கழித்தும் நினைவு வைத்துள்ளனர்.

பட வாய்ப்பு

பட வாய்ப்பு

மணிரத்னம் சாரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஆவலாக உள்ளேன். நானும் இருக்கிறேன் என்பதை நினைவூட்ட நான் மணி சாரை அவ்வப்போது சந்தித்து பேசுவது உண்டு.

கதை

கதை

தமிழ் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வருகின்றது. ஆனால் எனக்கு பிடித்த மாதிரி இல்லை. குறிப்பிட்ட தயாரிப்பு நிறுவனங்கள், நடிகர்களின் படங்களில் நடிக்க விரும்புகிறேன்.

ஆசை

ஆசை

படங்களை இயக்கினால் என்ன என்று சில நேரம் தோன்றும். ஆனால் அதற்கு தேவையான தொழில்நுட்ப அறிவு என்னிடம் இல்லை. என் நண்பர்களில் சிலர் சிறந்த ஒளிப்பதிவாளர்கள். அவர்கள் ஊக்கமளித்தாலும் தைரியம் வரவில்லை. ஒரு நாள் நான் படம் இயக்கலாம் என்றார் மது.

English summary
Roja girl Madhu said that though she has the desire to direct a movie she doesn't have the courage now to do so.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil