»   »  ரோஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

ரோஜாவுக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

செக் மோசடி வழக்கில் நீதிமன்றத்திற்கு வராமல் உள்ள நடிகை ரோஜாவை கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்துமாறு கூறி சென்னை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.

சென்னையைச் சேர்ந்த முரளி மோகன் ரெட்டி என்பவரிடம் ரோஜா பணம் வாங்கியிருந்தார். இதை திருப்பிச்செலுத்துவதற்காக அவர் கொடுத்த காசோலைகள், ரோஜாவின் கணக்கில் பணம் இல்லாததால் வங்கியிலிருந்துதிரும்பி விட்டன.

இதையடுத்து சைதாப்பேட்டை 17-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ரோஜா மீது வழக்குத் தொடர்ந்தார் ரெட்டி. இந்தவழக்கு விசாரணைக்கு வந்தபோது ரோஜாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிவா,

ரோஜாவுக்கு குழந்தை பிறந்துள்ளது. அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளதால், சொந்தகாரணங்களுக்காக அவர் சொந்த ஊர் சென்றுள்ளார். எனவே விசாரணையைத் தள்ளி வைக்க வேண்டும் என்றுகோரியிருந்தார்.

ஆனால் இதை ஆட்சேபித்த ரெட்டி தரப்பு வழக்கறிஞர், ஏற்கனவே இரண்டு, மூன்று முறை இதே காரணத்தைக் கூறிரோஜா வராமல் உள்ளார். எனவே மேலும் விசாரணையை தள்ளி வைக்கக் கூடாது என்று கோரினார்.

இதை ஏற்ற நீதிபதி ரோஜாவின் வழக்கறிஞர் மனுவைத் தள்ளுபடி செய்தார். அத்தோடு ரோஜாவுக்கு பிடிவாரண்ட்உத்தரவும் பிறப்பித்தார். மேலும் வருகிற பிப்ரவரி 5ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil