»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜா மிரட்டுகிறார் என்று அவருக்கு கடன் கொடுத்தவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சொந்த படம் தயாரிப்பதற்காக 1995ம் ஆண்டு பைனான்சியர் குந்த்சந்த் போத்ரா என்பவரிடம் நடிகை ரோஜா கடன் வாங்கினார்.ரோஜாவின் அண்ணன் குமாரசாமி ரெட்டி, நாகராஜரெட்டி ஆகியோர் பெயரில் இந்த கடன் பெறப்பட்டது.

இந்த கடன் தொகைக்காக நடிகை ரோஜா கொடுத்த காசோலைகள் (செக்) வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்தன.இதையடுத்து ரோஜா மீது குந்த்சந்த், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

வழக்கு விசாரணையின்போது கோர்ட்டில் ஆஜரான ரோஜா, ""என்னிடம் அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றார்.இதையடுத்து ரோஜாவுக்கு சொந்தமான அசையும் சொத்துக்களை முடக்கி வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் ரோஜா நடிக்கும் புதுப்படங்களில் அவருக்கு தரப்படும் சம்பளத் தொகையை கோர்ட்டில் டெபாசிட் செய்ய வேண்டும்என்றும் நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

இந்நிலையில் குந்த்சந்த் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மற்றொரு வழக்குத் தொடர்ந்துள்ளார். அதில் அவர்கூறியிருப்பதாவது:

இம்மாதம் 10ம் தேதி பிற்பகல் என் வீட்டுக்குள் சில அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்திருந்தனர்.ரோஜா மீதான வழக்கை வாபஸ் வாங்கு என்று மிரட்டினர். இதனால் நான் 8 லட்சம் ரூபாய்க்கான காசோலை மோசடி வழக்கைவாபஸ் பெற் றன். என்றாலும் நான்கு நாட்களாக தொடர்ந்து எனக்கு மிரட்டல்கள் வருகின்றன.

ரோஜாவும், அவரது அண்ணன் குமாரசாமியும் காலை, மாலை போனில் மிரட்டுகின்றனர். எல்லா வழக்குகளையும் வாபஸ் பெறு;இல்லையென்றால் 10ம் தேதி போல் மீண்டும் அடியாட்கள் வருவார்கள் என்கின்றனர். எனக்கு கொலை மிரட்டல் இருப்பதால்,போதிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் பைனான்சியர் குந்த்சந்த் போத்ராவுக்கு பாதுகாப்பு அளிக்கும்படி போலீசாருக்குஉத்தரவிட்டார்.

Read more about: chennai debt roja tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil