»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ரோஜாவுக்கு வழங்கப்பட்ட விருதை முடக்கி வைக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பைனான்சியர்முகுந்த் சந்த் போத்ரா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சினிமா பைனான்சியர் போத்ராவிடமிருந்து நடிகை ரோஜா லட்சக்கணக்கில் கடன் வாங்கியிருந்தார். அதைத் திருப்பிக் கொடுக்கும்படி போத்ரா கேட்டார்.அதற்காக நடிகை ரோஜா கொடுத்த செக் வங்கியில் பணமின்றி திரும்பி வந்து விட்டது.

இதையடுத்து போத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். ரோஜா நடிக்கும் படங்களின் சம்பளத்தை நீதிமன்றத்தில் கட்டும்படிஉத்தரவிடப்பட்டது. இதன்படி நடிகை ரோஜாவின் சம்பளம் நீதிமன்றத்தில் செலுத்தப்பட்டது.

இதற்கிடையே உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படத்தில் நடித்ததற்காக ரோஜாவுக்கு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

இதைத்தொடர்ந்து நடிகை ரோஜாவுக்கு வழங்கப்படும் விருது மற்றும் தங்கப்பதக்கத்தை முடக்கி வைத்து அரசே தனது பாதுகாப்பில் வைத்திருக்க கோரிபோத்ரா சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவுக்கு நடிகை ரோஜா சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் நான் போத்ராவிடமிருந்து எந்த கடனும் வாங்கவில்லை. என்சகோரதரர் வாங்கிய கடனுக்காக 21 லட்ச ரூபாய் நான் கொடுத்திருக்கிறேன். எனவே எனக்கு வழங்கப்படும் விருது மற்றும் பதக்கத்தை முடக்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிபதி ராமமூர்த்தி இதுகுறித்துக் கூறியதாவது:

நடிகை ரோஜா லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார் என்று பைனான்சியர் போத்ரா தனது மனுவில் கூறியுள்ளார். இதனால் நடிகை ரோஜாவுக்குசொந்தமாக தமிழக அரசு வழங்கும் இந்தப் பதக்கம் மற்றும் பரிசுத்தொகை தவிர வேறு சொத்து இல்லை என்று கூற முடியாது.

சினிமா துறையில் அவர் ஆற்றிய பங்குக்கு அங்கீகாரமாக இவ்விருது வழங்கப்படுகிறது. மேலும் நடிகை ரோஜா ஏற்கனவே 21 லட்சம் ரூபாய் முகுந்த்சந்த் போத்ராவிற்குக் கொடுத்துள்ளார். இதை போத்ரா மறுக்கவில்லை.

மேலும், ரோஜா கடன்தொகையைச் செலுத்த முடியாத நிலையில் உள்ளார் என்பதற்கு எந்த வித ஆவணங்களும் இல்லை.

ரோஜாவைத் துன்புறுத்தவும், அவர் பெயரைக் களங்கப்படுத்தவும் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதுவும் அரசு வழங்கும் பதக்கம் மற்றும் விருதை நீதிமன்றம் நிறுத்தி வைக்க முடியாது.

எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் பைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா நடிகை ரோஜாவுக்கு வழக்குச் செலவாக ஆயிரம் ரூபாய்கொடுக்க வேண்டும் என்று தனது தீர்ப்பளித்துள்ளார் ராமமூர்த்தி.

Read more about: actress award chennai roja tamilnadu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil