»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

என்னை பிளாக்மெயில் செய்த பைனான்சியர் போத்ராவை நீதிமன்றம் மூலம் ஆண்டவன் தண்டித்து விட்டார்என்று நடிகை ரோஜா கூறினார்.

ரோஜாவுக்கு வழங்கப்படவுள்ள விருதையும், பணமுடிப்பையும் முடக்க வேண்டும் என்று போத்ரா தாக்கல்செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்ட சந்தோஷத்தில் ரோஜா கூறியதாவது:

போத்ரா என்னை பலமுறை மிரட்டியுள்ளார். நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து என் மானத்தை வாங்கிவிடுவதாகக் கூறினார். ஆனால், சுமூகமாகப் பேசி பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்றுநினைத்திருந்தேன்.

ஆனால், அதை அவர் தவறாக எடுத்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். நானும் வழக்கை எதிர்கொண்டேன். என் மீது அடுக்கடுக்காக பல வழக்குகளை அவர் தொடுத்தார்.

வழக்குகளால் நான் பல முறை மனம் புண்பட்டுள்ளேன். அமைதியாக படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளமுடியாமல் கஷ்டப்பட்டேன். எல்லா கஷ்டங்களுக்கும் விடிவு காலமாக நீதிமன்றம் நல்ல தீர்ப்பு அளித்துள்ளது.மனதை வருத்திய புண்ணுக்கு மருந்து போட்டது போல் இத் தீர்ப்பு உள்ளது.

என்னைத் துன்புறுத்திய போத்ராவுக்கு நீதிமன்றம் மூலம் ஆண்டவன் தண்டனை கொடுத்துவிட்டார் என்றார்ரோஜா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil