»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை ரோஜா நடித்து வரும் 8 தமிழ் சினிமாக்களுக்கான சம்பளத் தொகையை அவருக்குக் கொடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

சினிமா பைனான்சியர் குந்த்சன் போத்ராவுக்கும், நடிகை ரோஜாவுக்கும் இடையே பண விவகாரம் இருந்து வருகிறது. கொடுத்த கடனுக்காக ரோஜா மீதுஅவர் புதுப் புது வழக்குகளை போட்டு வருகிறார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் போத்ரா தொடர்ந்த வழக்கில், கடந்த 1996ம் ஆண்டு ரோஜாவின் சகோதரர் குமாரசாமி ரெட்டி என்னிடம் ரூ.15 லட்சம்கடன் வாங்கினார். அதற்கு ரோஜா உத்தரவாதம் அளித்திருந்தார்.

இந்த தொகை வட்டியுடன் ரூ.42 லட்சமாக உயர்ந்துள்ளது. இதை வசூல் செய்ய ரோஜா மீது வழக்கு போட்டேன். ரோஜா நடிக்கும் படங்களின் சம்பளத்தொகையை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்று கோரினேன். அதன்படி 13 தயாரிப்பாளர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், திருப்பதி ஏழுமலை வெங்கடேசா படத் தயாரிப்பாளர் ராமநாராயணன் மட்டும் ஒரு லட்சத்தை கட்டினார். மற்றவர்கள் யாரும் பணம்கட்டவில்லை. ரோஜாவுடன் கூட்டு சேர்ந்து என்னை ஏமாற்றுகின்றனர்.

தற்போது ரோஜா பல படங்களில் நடித்து வருகிறார். மூன்றாவது நபர் பெயரில் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். சொந்தக் காரை கூட அவர் பெயரில்இல்லாமல் கவனமாக தவிர்த்துள்ளார். எல்லாம் என்னை ஏமாற்றுவதற்கு தான்.

எனவே எனது பணத்தை வசூலிக்க, அவர் நடித்து வரும் மிட்டா மிராசு, லூட்டி, ரமணா, ஷக்கலக்க பேபி, சொன்னால் தான் காதலா, காதல்அழிவதில்லை, களவும் கற்று மற, வாராய் என் தோழி ஆகிய படங்களின் சம்பளப் பணத்தை தயாரிப்பாளர்கள் நீதிமன்றத்தில் கட்ட உத்தரவிட வேண்டும்என்று கோரியுள்ளார்.

வழக்கை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, இம்மாதம் 12-ம் தேதி வரை இந்த 8 பட தயாரிப்பாளர்களும் ரோஜாவுக்கு சம்பளத் தொகையைபட்டுவாடா செய்யக் கூடாது என்று இடைக்கால தடை விதித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil