LEO: ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ் சூர்யா... லியோ சிங்கமாக விஜய்... லோகேஷின் சம்பவம் லோடிங்
சென்னை: விஜய் நடித்து வரும் அவரது 67வது படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்துக்கு முதலில் தளபதி 67 என தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தளபதி 67 படத்தின் டைட்டில் 'லியோ' என ப்ரோமோ வீடியோவுடன் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த ப்ரோமோவில் சிங்கத்தை குறிக்கும் வகையில் விஜய்யின் லியோ கேரக்டர் அறிவிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளபதி 67 டைட்டில்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் தளபதி 67 படத்தின் டைட்டிலை படக்குழு அறிவித்துள்ளது. செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு லியோ என்ற டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. கமலின் விக்ரம் படத்தின் டைட்டில் ப்ரோமோ போன்றே, தளபதி 67 டைட்டில் லியோ ப்ரோமோவும் வெளியாகியுள்ளது.

லியோ - சிங்கம் - விஜய்
பனிபடர்ந்த பகுதியில் தனியாக இருக்கும் வீட்டில் விஜய் சாக்லேட்டையும் பெரிய வாள் ஒன்றையும் தயாரிப்பதாக உருவாகியுள்ளது. மேலும் பிளடி ஸ்வீட் என விஜய் பஞ்ச் வைக்க தங்க நாணையத்தின் ஒருபக்கம் சிங்கத்தின் உருவமும், இன்னொரு பக்கம் லியோ என்ற டைட்டிலும் வருகிறது. அதன்படி இந்தப் படத்தில் விஜய்யை தனிக்காட்டு சிங்கமாக களமிறக்குகிறார் லோகேஷ். முக்கியமாக இந்த சிங்க முத்திரை விக்ரம் படத்தில் வரும் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரை நினைவுப்படுத்துவதாக ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் ரோலக்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. கமல், விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தின் இறுதியில் சூர்யாவும் கேமியோ ரோலில் என்ட்ரி கொடுத்து மிரட்டியிருந்தார். ரோலக்ஸ் என்ற கேரக்டரில் சூர்யாவின் அசுரத்தனமான வில்லத்தனம் சிலிர்க்க வைத்திருந்தது. இந்த சீனில் சூர்யா ஸ்கார்ப்பியன் டாட்டூவுடன் நடித்திருந்தார். இப்போது தளபதி 67 டைட்டில் லியோ என அறிவிக்கப்பட்டுள்ளது. லியோ என்பது சிங்கத்தை குறிப்பதால் விக்ரம் ரோலக்ஸுக்கும் விஜய்யின் லியோ கேரக்டருக்கும் தொடர்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்ஃபார்மா லோகேஷ் யுனிவர்ஸ் தான்
கைதி படத்தில் நெப்போலியன் என்ற போலீஸ் கேரக்டரில் நடித்திருந்த ஜார்ஜ் மரியன், விக்ரமில் ஏஜெண்ட் டினாவாக நடித்த வசந்தி இருவருமே லியோ படத்தில் இணைந்துள்ளனர். தற்போது ப்ரோமோவும் விக்ரம் பட ஸ்டைலில் வெளியாகியுள்ளது. இதனிடையே ரோலக்ஸின் ஸ்கார்ப்பியன் டாட்டூவும் விஜய்யின் லியோ கேரக்டரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸான லீட் கொடுத்துள்ளது. இதனால் இந்தப் படம் கண்டிப்பாக லோகேஷ் யுனிவர்ஸில் கான்செப்ட்டில் இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

ஆயுத பூஜைக்கு ரிலீஸாகும் லியோ
லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே சென்னையில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். விஜய்யுடன் த்ரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத் கெளதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் ஆகியோர் தளபதி 67ல் நடித்து வருகின்றனர். இந்நிலையில் லியோ டைட்டில் மட்டும் இல்லாமல், படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் என அறிவித்து படக்குழு டபுள் ட்ரீட் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











