»   »  ஜோடியாக அமெரிக்காவுக்கு சென்று தனித்தனியாக நாடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்

ஜோடியாக அமெரிக்காவுக்கு சென்று தனித்தனியாக நாடு திரும்பிய ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் அமெரிக்காவுக்கு ஜோடியாக சென்றுவிட்டு தனித்தனியாக திரும்பி வந்துள்ளனர்.

பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயும், அவரது கணவர் அபிஷேக் பச்சனும் மகள் ஆராத்யாவுடன் அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு சென்றனர். அவர்களுடன் ஐஸ்வர்யாவின் தாய் விருந்தா ராயும் சென்றார்.

நியூயார்க் நகரில் ஒரு மாத காலம் அவர்கள் விடுமுறையை கழித்தனர்.

வீடு

வீடு

விடுமுறையை கழிக்க நியூயார்க் சென்ற இடத்தில் சொகுசு வீடு ஒன்றை வாங்கியுள்ளனர் ஐஸ்வர்யாவும், அபிஷேக் பச்சனும். துபாயிலும் அவர்களுக்கு சொந்த வீடு உள்ளது. அந்த வீட்டின் மதிப்பு ரூ. 54 கோடி ஆகும்.

அபிஷேக்

அபிஷேக்

நியூயார்க் நகருக்கு ஜோடியாக சென்ற ஐஸ்வர்யா ராயும், அபிஷேக் பச்சனும் தனித்தனியாக மும்பை திரும்பியுள்ளனர். முதலில் அபிஷேக் தனியாக நாடு திரும்பினார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

அபிஷேக் வந்து சில நாட்கள் கழித்து ஐஸ்வர்யா ராய் தனது மகள் மற்றும் தாயுடன் மும்பை திரும்பினார். மும்பை விமான நிலையத்தில் அவர்களை புகைப்படக் கலைஞர்கள் புகைப்படம் எடுத்தனர்.

வேலை

வேலை

அபிஷேக் பச்சனுக்கு வேலை இருந்ததால் அவர் முதலில் மும்பைக்கு வந்துவிட்டாராம். மற்றபடி குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After holidaying for a month in the beautiful New York City, the power couple of the B-town, Aishwarya Rai Bachchan and Abhishek Bachchan have finally returned to India but separately!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil