»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

நடிகை ரோஜாவுக்கு இன்னும் சில நாட்களில் குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறியுள்ளதால்அவரது வழக்கு விசாரணையை தள்ளி வைக்கும்படி நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது. அதைஏற்ற நீதிபதி வழக்கை தள்ளிவைத்தார்.

ரூ. 8 லட்சத்திற்கான காசோலை கொடுத்ததில், அது வங்கியிலிருந்து திரும்பி விட்டதால், நடிகைரோஜா மீது சென்னை சைதாப்பேட்டை 17வது பெருநகர நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இன்று இந்த வழக்கில் ரோஜா ஆஜராகுமாறு நீதிபதி விஜயகாந்த்உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் ரோஜா நீதிமன்றத்திற்கு வரவில்லை. அவர் சார்பில் அவரது வக்கீல் சிவா ஒரு மனுவைத்தாக்கல் செய்தார். அதில் நடிகை ரோஜா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு இன்னும் 10நாட்களுக்குள் குழந்தை பிறந்து விடும் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். எனவே அவர்நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

மனுவை பரிசீலித்த நீதிபதி விஜயகாந்த், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை வருகிற 23ம்தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil