»   »  பிரியாவ விடுங்க.. பெண்கள் கொண்டாடும் ரோஷன் யாருனு தெரியுமா?

பிரியாவ விடுங்க.. பெண்கள் கொண்டாடும் ரோஷன் யாருனு தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Priya Prakash Varrier: Social Media Queen

சென்னை : கண் சிமிட்டல், புருவ நெரிப்பு மூலம் ரசிகர்கள் மனதைக் கண கச்சிதமாய் கவர்ந்திழுத்தவர் பிரியா வாரியர். சமீபத்தில் சமூக வலைதளத்தில் புயலாக மாறியது 'ஒரு அடார் லவ்'.

பாடல், டீசர் என வெளியான சில நாட்களில் பல மில்லியன் பேரால் பார்க்கப்பட்டுள்ளது. இதில் பிரியாவின் காதலனாக நடித்திருப்பவர் ரோஷன் அப்துல் ரஹூஃப்.

ஆண்கள் அனைவரும் பிரியா வாரியரை சுற்றிக் கொண்டிருக்க, பெண்கள் ரோஷனின் அசத்தலான ரியாக்‌ஷனுக்கு ஹார்ட்டின் ரியாக்‌ஷன் போட்டு வருகிறார்கள். அவரைப் பற்றிப் பார்க்கலாம்.

ரோஷனை யாரும் கண்டுக்கலையே

'ஒரு அடார் லவ்' படத்தின் "மாணிக்ய மலராய பூவி' பாடலில் நடித்துள்ள பிரியா வாரியர் குறும்புத்தனமான முகபாவனைகள் மூலம் இணையத்தில் டிரெண்டாகி இருக்கிறார். ஆனால் அதே வீடியோவில் இடம் பெற்றுள்ள அந்த மாணவனை பற்றி எவரும் அதிகமாக பேசவில்லை.

ரோஷன் அப்துல் ரஹூஃப்

ரோஷன் அப்துல் ரஹூஃப்

'ஒரு அடார் லவ்' படத்தில் நடித்திருக்கும் ரோஷன் அப்துல் ரஹூஃப்பும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாவதோடு அதிக ஃபாலோயர்களை பெற்று வருகிறார். இவரது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் குவிகிறார்களாம்.

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்

காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்

கேரளா, திருச்சூர் மாவட்டத்தை சேர்ந்த அவருக்கு வயது 20. இவர் தனது இளங்கலை பட்டப் படிப்பை ஒரு தனியார் கல்லூரியில் படித்து வருகிறாராம். அதிர்ஷ்டவசமாக தற்போதைக்கு இவர் சிங்கிள் தான்.

குடும்பம்

குடும்பம்

இவரது குடும்பம் அபுதாபியில் இருந்து கேரளாவுக்கு வந்திருக்கிறதாம். அப்பா அப்துல் ரஹூஃப் பிஸினஸ் செய்கிறாராம். இவருக்கு ராயிஸ் அப்துல் ரஹூஃப், ரஷித் அப்துல் ரஹூஃப் என இரு சகோதரர்களும் இருக்கிறார்கள்.

டான்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்

டான்ஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர்

நடனத்தின் மீதிருந்த அதிக ஆர்வத்தினால் முறையான பயிற்சிகள் எடுத்துள்ளாராம் ரோஷன். அதோடு அவர் D4 சீசன் 3 என்ற நடன நிகழ்ச்சியில் தனது அண்ணனோடு கலந்து கொண்டு டைட்டிலை கைப்பற்றி வெற்றி பெற்றிருக்கிறார்.

இவரும் அறிமுகம் தான்

இவரும் அறிமுகம் தான்

பிரியா வாரியரைப் போலவே ரோஷனுக்கும் ஒமர் லுலு இயக்கியிருக்கும் 'ஒரு அடார் லவ்' படம் தான் அறிமுகப் படம். முதல் படத்திலேயே ரசிகைகளைக் கவர்ந்திருப்பதால் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடிக்க இவரைத் தேடி வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறதாம்.

இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்க ரசிகைகள்

இன்ஸ்டாகிராமில் எக்கச்சக்க ரசிகைகள்

'ஒரு அடார் லவ்' படத்த்தின் இந்தப் பாடல் வெளியானது முதலே சைலண்டாக செம பாப்புலராகி இருக்கிறார் ரோஷன். இவரது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கை எகிறி வருகிறது. இப்போதே 4 லட்சம் ஃபாலோயர்களை கடந்திருக்கிறார்.

பொண்ணுங்க எல்லாம் ரோஷன் பின்னாடி

பசங்க என்னடானா ப்ரியா பின்னாடி சுத்துறானுங்க... சரினு அப்படிக்கா போனா பொண்ணுங்க எல்லாம் ரோஷன் பின்னாடி திரிதுங்க.

வெட்கம் கலந்த எக்ஸ்பிரஷன்

ரோஷனோட குறும்பான, வெட்கம் கலந்த எக்ஸ்பிரஷனுக்கும் மிச்ச க்ரெடிட்டை கொடுங்க. ஐ லவ் திஸ் கய்! #OruAdaarLove

ரோஷன் டார்லிங்கே

எல்லோரும் பிரியாவை பத்திதான் பேசுறாங்க. இந்த பையனை யாரும் கவனிக்கலை. ரோஷன் டார்லிங்கே, யூ லுக்கிங் சோ க்யூட். அந்த எக்ஸ்பிரஷன்லயே விழுந்துட்டேன்!

English summary
'Oru Adaar Love' fame Mohammad Roshan aka Roshan Abdul Rahoof was born on 23 April 1998 in Abu Dhabi. In a small clip of the song Manikya Malaraya Poovi, Rahoof is expressing her affection towards her girlfriend Priya prakash varrier with his facial expressions in a crowded auditorium.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil