»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பாலிவுட்டின் இப்போதைய "ஹாட் ஸ்டார் ரித்திக் ரோஷன், நடிகர் சஞ்சய் கானின் மகள் சுசானே கான் திருமணம் புதன்கிழமை பெங்களூரில் நடக்கிறது.

பெரியவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு இந்த காதல் திருமணத்திற்கான அனைத்தது ஏற்பாடுகளும் மிக வேகமாக நடந்து வருகிறது. திருமணத்தை"மெகா நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிட்டுள்ளனர் ரித்திக் ரோஷன், சூசானே குடும்பத்தினர். திருமணத்தையொட்டி மணமக்களின் குடும்பத்தினர் பெங்களூர் வந்துவிட்டனர்.

திங்கள்கிழமை மாலை மணப்பெண்ணுக்கு மருதாணி (மெஹந்தி) இடும் நிகழ்ச்சி நடந்தது. திருமணத்திற்கு வந்துள்ள ரித்திக் ரோஷன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர்கூறுகையில், திருமணம் ஹிந்து முறைப்படி நடக்குமா அல்லது முஸ்லீம் முறைப்படி நடக்குமா என்று தெரியவில்லை என்றார்.

ரித்திக், சூசானே திருமணம் முதலில் ஜனவரி மாதம் நடக்கவிருப்பதாக இருந்தது. ஆனால் தற்போது திடீரென்று முடிவு செய்து வரும் புதன்கிழமை 20 ம் தேதிநடத்த முடிவு செய்து விட்டோம் என்று ரித்திக்கின் மாமனார் சஞ்சய்கான் தெரிவித்தார். திருமணம் குறித்து அவர் வேறு எந்த விஷயத்தையும் கூறவில்லை. இதுஎங்கள் குடும்ப விஷயம் என்பதுடன் முடித்துக் கொண்டார் சஞ்சய் கான்.

பாலிவுட் மட்டுமல்லாது, இந்தியா முழுவதும் இளைஞிகளின் மனம் கவர்ந்தவர் ரித்திக் என்பதால் திருமணம் நடக்கும் எலஹங்கா பகுதியில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீஸார் கூறுகையில் திருமணம் முடிந்ததும் வரும் சனிக்கிழமைக்குள் மணமக்கள் பெங்களூரை விட்டுப் புறப்படத்திட்டமிட்டுள்ளனர் என்றனர்.

பெங்களூர்- புனே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சஞ்சய் கானின் கோல்டன் பாம் ரிசார்ட்டில் திருமணம் நடக்கவிருக்கிறது. திருமணத்திற்கு நெருங்கியஉறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். மும்பை திரைப்பட நட்சத்திரங்கள் சிலருக்கு மட்டுமே அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

"கஹோ னா பியார் ஹை என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமாகியவர் ஹிருத்திக் ரோஷன். தனது கவர்ச்சிக் கண்கள் மூலம் ரசிகைகளை வசியப்படுத்தியவர்ரித்திக். பாலிவுட்டின் இப்போதைய இளம் புயல். இவரது வருகையால் "கான் கோஷ்டியினர் ஓரம்கட்டப்பட்டனர்.

ரித்திக் ரோஷன் இந்து மதத்தைச் சேர்ந்தவர். அவரது காதலி சூசானே முஸ்லீம். சூசானேவின் தந்தை சஞ்சய் கான், காதலுக்கு மதம் முக்கியமில்லை என்றுவர்ணிக்கிறார்.

நாமும் வாழ்த்துவோம்!

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil