கொலவெறிடி பாடலின் சாதனையை முறியடித்த ரவுடி பேபி: தனுஷ் ஹேப்பி பேபி
Recommended Video

சென்னை: கொலவெறிடி பாடலின் சாதனையை ரவுடி பேபி பாடல் முறியடித்துள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

தனுஷ் எழுதி பாடிய அந்த பாடல் தற்போது புது சாதனை படைத்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் வீடியோ என்ற சாதனையை தக்க வைத்திருந்தது தனுஷின் ஒய் திஸ் கொலவெறிடி. அந்த பாடல் வீடியோவை 17.5 கோடி பேர் பார்த்துள்ளனர்.
இந்நிலையில் ரவுடி பேபி பாடல் வீடியோ யூடியூபில் 17.9 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொலவெறிடி பாடல் வீடியோவின் சாதனையை ரவுடி பேபி முறியடித்துள்ளது.
மேலும் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் பாடல் என்ற சாதனையை படைத்துள்ளது ரவுடி பேபி. அனிருத் இசையில் தனுஷ் பாடிய ஒய் திஸ் கொலவெறி டி பாடல் உலக அளவில் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
ரவுடி பேபி பாடல் வீடியோவை அதிகம் பேர் பார்த்துள்ள போதிலும் அதற்கு 1 லட்சத்து 14 ஆயிரம் டிஸ்லைக்குகளும் கிடைத்துள்ளது.


Click it and Unblock the Notifications











