twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா அனுமதி இன்றி அவர் பாடல்களை பயன்படுத்தக் கூடாது: ஹைகோர்ட் அதிரடி

    By Siva
    |

    Recommended Video

    Isai Celebrates Isai: Ilayaraja: செக்யூரிட்டியை திட்டிய இளையராஜா: வைரல் வீடியோ

    சென்னை: இசைஞானி இளையராஜாவின் பாடல்களை அவர் அனுமதி இல்லாமல் பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    தான் இசையமைத்த பாடல்களுக்கு ராயல்டி கேட்டு வருகிறார் இசைஞானி இளையராஜா. இந்நிலையில் தனது பாடல்களை தன் அனுமதி இன்றி வணிக ரீதியாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று கூறி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    Royalty case: Ilaiyaraja wins

    அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் இளையராஜாவின் பாடல்களை அவரின் அனுமதி இன்றி யாரும் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

    இந்நிலையில் அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் இடைக்காலத் தடையை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது. இளையராஜாவுக்கு தான் அவரின் பாடல்களின் உரிமை உள்ளது. அதனால் அவர் இசையமைத்த பாடல்களை அவர் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    இந்த தீர்ப்பால் இளையராஜா மட்டும் அல்ல அவரின் ரசிகர்களும் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். ராயல்டி பிரச்சனையால் ஆளாளுக்கு இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்நிலையில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதியை அளித்துள்ளது.

    சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பார்த்ததும் அவர் என்ன சம்பளம் வாங்காமலா இசையமைத்தார், எல்லாம் பணத்தாசை, இந்த வயதில் இவருக்கு ஏன் இந்த ராயல்டி எல்லாம் என்று சிலர் விளாசியுள்ளனர். ராயல்டி பிரச்சனையால் பிரிந்த இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் ஒன்று சேர்ந்துவிட்டனர்.

    பிரிந்த நட்பு ஒன்று சேர்ந்த நிலையில் இளையராஜா தனது போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Chennai high court said in an order that no one can use Ilaiyaraja's songs without his permission.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X