Just In
- 14 min ago
ரெட்ரோ லுக்கில் அசத்தும் ரன்வீர் சிங்.. அசந்து போன ரசிகர்கள்!
- 41 min ago
ஜித்தன் ரமேஷின் அறியப்படாத பக்கங்கள்... ரகசியம் சொல்லும் மலையாள இயக்குநர் அபிலாஷ்!
- 2 hrs ago
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- 2 hrs ago
கமல் காலில் ஆபரேஷன்.. ஆரி அனுப்பிய அன்பு மெஸேஜ்ஜ பாத்தீங்களா.. அள்ளும் லைக்ஸ்!
Don't Miss!
- Finance
ஒன் ஸ்டாப் மொபைல் ஆப்.. MSME நிறுவனங்களுக்கு மத்திய அரசின் அசத்தலான சேவை..!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Automobiles
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆண்மையில்லாத்தனம்: இளையராஜா சொன்னதில் என்ன தவறு?: கங்கை அமரன்
சென்னை: தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் தனது பாடல்களை பயன்படுத்துவது அவர்களின் ஆண்மையில்லாத்தனத்தை காட்டுகிறது என்று இளையராஜா கூறியதில் தவறு இல்லை என்கிறார் கங்கை அமரன்.
தற்போதுள்ள இசையமைப்பாளர்கள் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்துகிறார்கள். அப்படி பயன்படுத்துபவர்களை இசைஞானி இளையராஜா பேட்டி ஒன்றில் விளாசினார். இதை பார்த்த 96 படக்குழுவை சேர்ந்த ஒருவரோ இளையராஜாவுக்கு ராயல்டி கொடுத்த பிறகே அவரின் பாடல்களை பயன்படுத்தியதாக ட்விட்டரில் தெரிவித்தார்.
இந்நிலையில் இது குறித்து அவரின் தம்பி கங்கை அமரன் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

இளையராஜா
பெரிய ஞானிகள் சொல்லும்போது அதை பேசாமல் ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. அந்த காலத்தில் நாம் இளையராஜா மாதிரி இசையமைத்தால் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து இசையமைப்பது நல்லது தானே. இளையராஜா பாடல்களை பயன்படுத்துகிறோம், நன்றி என்று கார்டு போட்டுவிட்டு, அவர் கேட்கும் ராயல்டியை கொடுத்துவிட்டு பாடல்களை தாராளமாக பயன்படுத்தலாம். அப்படி நன்றி தெரிவித்து கார்டு போடுவதற்கு என்ன?. அந்த நன்றி உங்களுக்கு இல்லை.

வெற்றி
90களில் கதை கொண்ட அந்த படம் நன்றாக ஓடியது என்கிறீர்களே, நன்றி கெட்ட மாந்தரடா என்று பாடும்படி உள்ளது. ஒரு இசையமைப்பாளர் எந்த பீரியடில் கதை அமைகிறதோ அதற்கேற்ப பாடல்களை போட வேண்டும் என்று சொல்வதில் தவறு இல்லை. இந்த மாதிரி ஒரு சிந்தனையை வளர்த்துக்கோ என்று சொல்வதில் தவறு இல்லை.

பாடல்கள்
இளையராஜா அனுமதி இல்லாமல் அவர் பாடல்களை பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஆதரிக்கிறேன். முன்பு காப்புரிமை பிரச்சனை எழுந்தபோது இளையராஜாவுக்கு எதிராக நான் இருந்ததற்கு காரணம் அப்பொழுது எனக்கு புத்தி இல்லை.

எஸ்.பி.பி.
யோசித்து பார்த்தால் நான் கட்டிய வீட்டில் குடியிருந்து கொண்டு என்னடா வாடகை தர மாட்டேன் என்கிறீர்களே என கேட்பது சரியாகத் தான் உள்ளது. அப்படி பேசியபோது அண்ணன் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. அவருக்கு என்னைப் பற்றி நன்றாகத் தெரியும் என்கிறார் கங்கை அமரன். ராயல்டி பிரச்சனையால் பிரிந்த இளையராஜாவும், பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியமும் மீண்டும் ஒன்று சேர்ந்ததில் மகிழ்ச்சி என்று கங்கை அமரன் தெரிவித்துள்ளார்.