»   »  கருமம் கருமம் பார்க்க முடியலை: சன்னியின் காண்டம் விளம்பரத்திற்கு தடை கோரும் ஆர்பிஐ

கருமம் கருமம் பார்க்க முடியலை: சன்னியின் காண்டம் விளம்பரத்திற்கு தடை கோரும் ஆர்பிஐ

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: சன்னி லியோன் வரும் ஆணுறை விளம்பரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(ஆர்பிஐ) கோரிக்கை விடுத்துள்ளது.

சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பப்படுகிறது. இந்நிலையில் அந்த விளம்பரத்தை தடை செய்ய வேண்டும் என்று ரிபப்ளிகன் பார்ட்டி ஆப் இந்தியா(அதாவாலே பிரிவு) கோரிக்கை விடுத்துள்ளது.

அந்த கட்சியின் மகளிர் பிரிவு தான் சன்னிக்கு எதிராக களமிறங்கியுள்ளது.

அசிங்கம்

அசிங்கம்

சன்னி லியோனின் ஆணுறை விளம்பரத்தை பார்க்க முடியவில்லை. அது பெண் பார்வையாளர்களுக்கு அவமானமாக உள்ளது. விளம்பரத்தில் வரும் காட்சிகள் மோசமாக உள்ளது என்று கட்சியின் மகளிர் பிரிவு செயலாளர் ஷீலா கங்குர்தே தெரிவித்துள்ளார்.

புகார்கள்

புகார்கள்

சன்னி விளம்பரம் குறித்து பல பெண்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளது. ஒரு வீட்டில் குடும்பத்தோடு அமர்ந்து அந்த விளம்பரத்தை பார்க்க முடியுமா என்று கேட்கிறார் ஷீலா.

தடை

தடை

சன்னி விளம்பரம் மூலம் தவறான தகவல் பரப்பப்படுகிறது. விளம்பரத்தை பார்த்து பெண்கள் நெளிகிறார்கள். சன்னி லியோனின் விளம்பரத்தை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று ஷீலா கூறுகிறார்.

சன்னி

சன்னி

மக்களுக்கு எது சிறந்தது என்று அரசு முடிவு செய்யட்டும். ஒருவர் இதை தான் செய்ய வேண்டும், செய்யக் கூடாது என்று கூற நான் யார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்று சன்னி பதில் அளித்துள்ளார்.

English summary
The women's wing of Republican Party of India (Athawale faction) has objected to a condom advertisement (TV commercial) featuring the actress Sunny Leone for its ‘obscene expressions’.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil