ஒரே வாரத்தில் ரூ.750 கோடியை கடந்த ஆர்ஆர்ஆர் படத்தின் கலெக்ஷன்... தொடர்ந்து வசூல் சாதனை!
சென்னை : இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்தப் படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள நிலையில், மற்ற திரைப்படங்களையும் தாண்டி படம் வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஆர்ஆர்ஆர் படம்
இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி வெற்றிகரமாக ஒடி வருகிறது ஆர்ஆர்ஆர் படம். ராம்சரண், ஜூனியர் என்டிஆர், சமுத்திரகனி, ஆலியாபட், ஷ்ரேயா சரண் உள்ளிட்டவர்கள் நடிப்பில் இந்தப் படம் மிகவும் பிரம்மாண்டமான தயாரிப்பாக எடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர போராட்ட காலக்கதை
படம் ரசிகர்களை சுதந்திர காலக்கட்டத்திற்கு அழைத்து சென்றது. வரலாற்று பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. நடிகர்களும் தங்களது கேரக்டரை உணர்ந்து சிறப்பான நடிப்பை அளித்தனர். ஆலியா பட்டின் கேரக்டர் வீணடிக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், அவர் அதுகுறித்து சமீபத்தில் தன்னுடைய விளக்கத்தை அளித்திருந்தார்.

ஆலியா பட் விளக்கம்
ராஜமௌலி இயக்கத்தில் இணைந்து நடித்தது தனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்ததாக அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திரையரங்குகளில் ரிலீசாகி சிறப்பாக ஓடிவரும் ஆர்ஆர்ஆர் தொடர்ந்து வசூல் சாதனை புரிந்து வருகிறது. படம் ரிலீசாவதற்கு முன்னதாகவே இந்த வசூல் சாதனை ஆரம்பித்தது.

வசூல் சாதனை
தற்போது மற்ற திரைப்படங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு இந்தப் படம் தொடர்ந்து திரையரங்குகளில் வசூலித்து வருகிறது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தப் படம் ரிலீசான நிலையில், அனைத்து மொழிகளிலும் படம் நன்றாக ஓடி வருகிறது.
Recommended Video

மொழி தேவைப்படாத படம்
சிறப்பான படத்தை பார்ப்பதற்கு மொழி அவசியமில்லை என்பதை படம் நிரூபித்து வருகிறது. பிரம்மாண்டத்திற்கு பெயர்போன ராஜமௌலி இந்தப் படத்திலும், தனது முந்தைய படங்களை விஞ்சும் வகையில் காட்சிகளை சிறப்பாக அமைத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ரூ.750 கோடி வசூல்
இந்நிலையில் தற்போது வரை இந்தப்படம் 750 கோடி ரூபாயை உலகளவில் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இந்த வசூலை ஆர்ஆர்ஆர் சாதித்துள்ளது. கொரோனா தற்போது ஓரளவிற்கு மட்டுப்பட்டுள்ள நிலையில் இந்த வசூல் சாதனை நிகழ்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications











