நண்பர்கள் தினத்துக்கு நச்சுன்னு பாட்டுப் போட்ட ராஜமெளலி.. மரகதமணி இசையில் அசத்தும் அனிருத்!

சென்னை: ஆர்.ஆர்.ஆர் படத்தின் அதிரடியான ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி இருக்கிறது.

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் ஆர்.ஆர்.ஆர்.

இசையமைப்பாளர் மரகதமணி இசையில் உருவாகி உள்ள இந்த நட்பு பாடலை அனிருத், விஜய் ஏசுதாஸ், அமித் திரிவேதி உள்ளிட்ட பிரபல பாடகர்கள் பாடி உள்ளனர்.

நண்பர்கள் தினம்

நண்பர்கள் தினம்

நாடு முழுவதும் ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. நண்பர்கள் தினத்தை முன்னிட்டு "நட்பு" எனும் தலைப்பிலேயே உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் பாடலை படக்குழு தற்போது வெளியிட்டு இணையத்தை தெறிக்கவிட்டு வருகிறது.

பாகுபலி இசையமைப்பாளர்

பாகுபலி இசையமைப்பாளர்

பாகுபலி படத்துக்கு இசையமைத்த மரகதமணி தான் ஆர்.ஆர்.ஆர் படத்துக்கும் இசையமைத்துள்ளார். அவர் இசையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பல்வேறு மொழிகளில் உருவாகி உள்ள இந்த நட்பு பாடல் தற்போது சக்கைப் போடு போட்டு வருகிறது.

அசத்தும் அனிருத்

அசத்தும் அனிருத்

ஆர்.ஆர்.ஆர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான நட்பு பாடலை இசையமைப்பாளரும் பாடகருமான அனிருத் பாடி இருக்கிறார். மரகதமணி, அமித் திரிவேதி, விஜய் ஜேசுதாஸ் உள்ளிட்ட பாடகர்களுடன் இணைந்து அனிருத் பாடும் வீடியோ ராக்ஸ்டார் ரசிகர்களை சந்தோஷக் கடலில் ஆழ்த்தி உள்ளது.

இரு சிங்கங்கள்

இரு சிங்கங்கள்

ராஜமெளலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஹீரோக்களாக நடித்துள்ள ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இருவரும் இந்த தீத் தெறிக்கும் பாடலின் இறுதியில் கோட்சூட் போட்டு செம மாஸாக இரு சிங்கங்கள் போல என்ட்ரி கொடுத்து அசத்துகின்றனர்.

நெருப்பா இருக்கு

நெருப்பா இருக்கு

பாகுபலி படத்தில் இடம்பெற்ற பாடல்களை போலவே பிரம்மாண்டமாக இந்த நட்பு பாடல் நண்பர்கள் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கிறது. பேக்ரவுண்டில் இரு கைகள் இணைந்திருக்கும் செட் போடப்பட்டு நெருப்பு கொழுந்து விட்டு எரிவது போல செய்திருக்கும் செட்டிங் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பாகுபலியை வீழ்த்துமா

பாகுபலியை வீழ்த்துமா

இந்திய சினிமா உலகையே வியந்து பார்க்க வைத்த பாகுபலி படத்தின் வசூல் சாதனையை ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வீழ்த்துமா என ஏகப்பட்ட ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 1500 கோடி வசூலை பாகுபலி 2ம் பாகம் மட்டுமே அள்ளி அசுர சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கைகளில்

ரசிகர்கள் கைகளில்

இயக்குநர் ராஜமெளலியின் பிரம்மாண்ட இயக்கத்தின் மேல் அனைத்து ரசிகர்களுக்கும் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் இந்த படம் பாகுபலி படம் அளவுக்கு சிறப்பாக இருக்கும் என தெரிகிறது அந்த படத்தை போலவே இந்த படமும் வசூல் ரீதியாக சாதனை படைப்பது ரசிகர்களின் கைகளில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

"RRR FIRST SONG STORM" எனும் ஹாஷ்டேக் இந்தியளவில் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராஜமெளலியின் ரசிகர்கள் என பலரும் இந்த நட்பு பாடலை டிரெண்ட் செய்து அதன் ஸ்க்ரீன் ஷாட்களையும் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

வரும் அக்டோபர் மாதம் ஆர்.ஆர்.ஆர் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால், ஆகஸ்ட் மாதம் ஆகியும் இன்னமும் தியேட்டர்கள் திறப்பு குறித்த எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் குறைந்தால் இந்த ஆண்டு தசரா பண்டிகையில் ஆர்.ஆர்.ஆர் ரிலீசாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை ஆட காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X