தி காஷ்மீர் ஃபைல்ஸ்,கங்குபாய் கத்தியவாடி படங்களை பின்னுக்குத் தள்ளிய RRR.. இப்படியொரு வசூல் சாதனையா?
மும்பை: இயக்குநர் ராஜமெளலியின் RRR திரைப்படம் பாலிவுட்டில் 5 நாட்களிலேயே 100 வசூல் சாதனையை கடந்து பாலிவுட் திரையுலகையே அதிர வைத்திருக்கிறது.
ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் தெலுங்கு வெர்ஷனை போலவே இந்தியிலும் சக்கைப் போடு போடுகிறது.
பாகுபலி படம் பண்ணிய தாக்கம் மற்றும் அஜய் தேவ்கன், ஆலியா பட் என பாலிவுட் பிரபலங்கள் இடம்பெற்றது என ஆர்ஆர்ஆர் படம் இந்தி மார்க்கெட்டில் 5 நாட்களிலேயே 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது.

600 கோடி வசூல்
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என இந்தியாவின் 5 மொழிகளில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியான 5 நாட்களிலேயே 600 கோடி ரூபாய் வசூலை அசால்ட்டாக அள்ளி வெற்றி நடைபோட்டு வருகிறது. 6வது நாள் வசூல் உடன் சேர்த்தால் பாகுபலி படத்தின் முதல் பாக வசூலை ஆர்ஆர்ஆர் முந்திவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியில் 100 கோடி
இந்தி பெல்ட்டில் மட்டும் இயக்குநர் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெறும் 5 நாட்களிலேயே 100 கோடிக்கும் அதிகமாக வசூல் ஈட்டி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்திருக்கிறது. இந்த ஆண்டு பாலிவுட்டில் வெளியான படங்களில் மிக சொற்பமான படங்கள் மட்டுமே 100 கோடி வசூலை பெரும் முயற்சிக்கு பிறகு தாண்டியது குறிப்பிடத்தக்கது.

தி காஷ்மீர் ஃபைல்ஸ்
இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் பாலிவுட்டில் 200 கோடி வசூலை கடந்துள்ளது. அந்த படம் 100 கோடி வசூலை 13 நாட்களுக்கு பிறகே கடந்த நிலையில், வெறும் 5 நாட்களிலேயே 100 கோடி வசூலை அள்ளி ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் மின்னல் வேகத்தில் வசூல் சாதனையை படைத்திருக்கிறது.

கங்குபாயும் காலி
பாலிவுட் திரையுலகின் முன்னணி இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி படம் 8 நாட்களுக்கு மேல் தான் 100 கோடி வசூலை தாண்டியது என்றும் அந்த படத்தின் வசூலையும் 5 நாட்களில் ஆர்ஆர்ஆர் படம் முந்தி கங்குபாயையும் காலி செய்து விட்டது என கொண்டாடி வருகின்றனர்.

ராம கோஷம்
கிளைமேக்ஸ் காட்சியில் அல்லூரி சீதாராம ராஜுலு கெட்டப்பில் நடிகர் ராம்சரண் ராமராகவே வேடமிட்டு வில் அம்புடன் ஆங்கிலேயர்களை துவம்சம் செய்வதை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் தியேட்டர்கள் முழுக்க ராம கோஷத்தை எழுப்பி கூட்டம் கூட்டமாக வந்து படத்தை பார்த்து செல்வது தான் காரணம் என்கின்றனர். பிரபாஸின் ஆதிபுருஷ் ராமாயணத்தையே மையமாக வைத்து உருவாகி வரும் நிலையில், அடுத்த ஆண்டு இன்னொரு பாக்ஸ் ஆபிஸ் வேட்டையை பிரபாஸ் நடத்துவார் என தெரிகிறது.

அன்ஃபாலோ செய்த ஆலியா
ஆர்ஆர்ஆர் படத்திலும் ஆலியா பட் நடித்துள்ள நிலையில், அவரது காட்சிகளை இயக்குநர் ராஜமெளலி அதிக அளவில் நீக்கி விட்டார் என்கிற கடுப்பில் அவரை இன்ஸ்டாகிராமில் இருந்து அன்ஃபாலோ செய்து விட்டார் என பெரும் பரபரப்பே நடைபெற்று வருகிறது. ஆலியா பட் நடித்த ஆர்ஆர்ஆர் திரைப்படம் இத்தனை பெரிய பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்து வருவதை அவரால் கொண்டாட கூட முடியவில்லை.
Recommended Video

தமிழ்நாட்டில்
டோலிவுட்டில் 300 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் வசூலை ஆர்ஆர்ஆர் திரைப்படம் கடந்து விட்டதாகவும் பாலிவுட்டில் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலை அள்ளிவிட்டதாகவும் கூறப்படும் ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படம் கோலிவுட்டிலும் வெறும் 5 நாட்களில் 40 கோடி ரூபாய் வரை வசூல் வேட்டை நடத்தி வெற்றிநடை போடுவதாக கூறுகின்றனர். இந்த வார இறுதியில் 850 கோடி வசூலை படம் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











