மிரட்டல் ராம்...மிரள வைக்கும் பீம்...ஆர்ஆர்ஆர் போஸ்டர்கள் வெளியீடு

ஐதராபாத் : டைரக்டர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

1920 களில் நடப்பது போன்ற நட்பை மையமாகக் கொண்ட இந்த படம் தான் ஆர்ஆர்ஆர். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.

தள்ளிப்போன டிரைலர் ரிலீஸ்

தள்ளிப்போன டிரைலர் ரிலீஸ்

அதிகம் எதிர்பார்க்கப்படும் ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் டிசம்பர் 3 ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பிறகு தவிர்க்க முடியாத காரணங்களால் டிரைலர் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

மாஸ் போஸ்டர் வெளியீடு

மாஸ் போஸ்டர் வெளியீடு

இந்நிலையில் டிசம்பர் 9 ம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக டைரக்டர் ராஜமெளலி அறிவித்திருந்தார். இதனை முன்னிட்டு புதிய போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் ராம் சரண், ஜுனியர் என்டிஆரின் கேரக்டரின் பெயர்கள் அடங்கிய புதிய மாஸான போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது தான் கேரக்டர்

இது தான் கேரக்டர்

இதில் ஜுனியர் என்டிஆர் பீம் கேரக்டரிலும், ராம் சரண் ராம் கேரக்டரிலும் நடித்துள்ளனர். இதில் ஜுனியர் என்டிஆரின் போஸ்டர் சோஷியல் மீடியாவில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அத்துடன் இது பீம் உங்களுக்காக. ஆர்ஆர்ஆர் டிரைலர் இன்னும் 3 நாட்களில் என்ற வாசகத்துடன் புதிய போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

ராம் சரண் வெளியிட்ட போஸ்டர்

ராம் சரண் வெளியிட்ட போஸ்டர்

இதைத் தொடர்ந்து தனது கேரக்டர் இருக்கும் போஸ்டரை ராம் சரணே வெளியிட்டார். அதில், இது ராம் உங்களுக்காக. ஆர்ஆர்ஆர் டிரைலர் இன்னும் 3 நாட்களில். தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்கள் அல்லுரி சீதாராம ராஜு மற்றும் கோமாரம் பீம் ஆகியோரின் வாழ்க்கை பற்றியது. சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆர்ஆர்ஆர் படத்தின் ஃபஸ்ட்சிங்கிள் க்ளிம்ப்ஸ் பெரும் வரவேற்பை பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X