ஃபிரண்ட்ஷிப் டேவுக்காக காத்திருக்கும் ஆர்ஆர்ஆர் படத்தின் அசத்தல் அப்டேட்.. செமயான விஷயம் இருக்கு!
சென்னை: எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் ஆர்ஆர்ஆர் படத்தின் அசத்தல் அப்டேட் ஒன்று ஃபிரண்ட்ஷிப் டேவுக்காக காத்திருக்கிறது.
ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் நடிப்பில் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் திரைப்படம் ஆர்ஆர்ஆர்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு பாடல்கள் மட்டுமே பேலன்ஸ் உள்ள நிலையில் அப்படத்திற்கான புரமோஷன் பாடலை படமாக்கி வருகிறார் ராஜமவுலி.

ராஜமவுலி ஹீரோஸ்
இரண்டு செட்களில் இந்த படப்பிடிப்பு நடக்கிறது. மேலும், இந்த புரமோஷன் பாடலில் ஆர்ஆர்ஆர் படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மட்டுமின்றி, இதற்கு முன்பு தான் இயக்கிய படங்களில் நடித்த பிரபாஸ், நிதின், நானி, ரவிதேஜா, சுனில் ஆகியோரும் நடிக்கின்றனர்.

அற்புதமான செட்
இந்த புரமோஷன் பாடல் நண்பர்கள் தினத்தில் வெளியிடப்படவுள்ளது. இந்த பாடலை காட்சிப்படுத்துவதற்காக ஹைதராபாத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஸ்டுடியோவில் ஒரு அற்புதமான செட்டை வடிவமைத்துள்ளார் எஸ்எஸ் ராஜமவுலி.

அனிருத் பாடியிருக்கிறார்?
இந்தப் பாடலை பிரபல இசையமைப்பாளரான எம்எம் கீரவாணியின் மகன் கால பைரவா பாடியுள்ளார். இதனிடையே ஆர்ஆர்ஆர் படத்தில் இசையமைப்பாளர் அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரோர் ஆஃப் ஆர்ஆர்ஆர்
அடிக்கடி படத்தின் அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி அண்மையில் ரோர் ஆஃப் ஆர்ஆர்ஆர் என படப்பிடிப்பு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியிடப்பட்டது. அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
பிரம்மாண்டமாக தயாராகி வரும் ஆர்ஆர்ஆர் படம் வரும் அக்டோபர் 13ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது. பாகுபலி இயக்குநரான எஸ்எஸ் ராஜமவுலியின் படம் என்பதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











