தெறிக்க விடும் ஆர்ஆர்ஆர் செகண்ட் சிங்கிள் ப்ரோமோ வெளியீடு
ஐதராபாத் : எஸ்எஸ்.ராஜமெளலி இயக்கி உள்ள ஆர்ஆர்ஆர் படம் 2022 ம் ஆண்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. ராம்சரண், ஜுனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
1920 களில் நடப்பது போன்ற நட்பை அடிப்படையாகக் கொண்டதாக இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடும் ஐதராபாத் நிஜாமை பற்றிய கதையாகும். இந்த ஆண்டில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இது உள்ளது.

நண்பர்கள் தினத்தில் ஃபஸ்ட் சிங்கிள்
இந்த படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் பாடல் ஆகஸ்ட் மாதம் சர்வதேச நண்பர்கள் தினத்தன்று வெளியிடப்பட்டது. தோஸ்தி என டைட்டில் வைக்கப்பட்ட இந்த பாடல் நட்பை சொல்லும் மற்றுமொரு பாடலாக அமைக்கப்பட்டது. அனிருத், விஜய் யேசுதாஸ் உள்ளிட்டோர் தோன்றும் இந்த பாடல் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. இந்த பாடல் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.

செகண்ட் சிங்கிள்
தெலுங்கு, தமிழ், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாரிக்கப்பட்டுள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் செகண்ட் சிங்கிள் நவம்பர் 10 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. பட்டையை கிளப்பும் பீட்ஸ் உடன், துள்ளல் ஆட்டம் போட வைக்கும், நாட்டு நாட்டு என துவங்கும் இந்த பாடலில் ராம் சரண் மற்றும் ஜுனியர் என்டிஆர் நடனமாடி உள்ளனர்.

ப்ரோமோ வெளியிட்ட படக்குழு
இந்த ஹை வோல்டேஜ் டான்ஸ் செகண்ட் சிங்கிளின் ப்ரோமோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இதனால் இந்த பாடல் மற்றும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது. நவம்பர் 10 ம் தேதி காலை 11 மணிக்கு செகண்ட் சிங்கிள் பாடலான நாட்டு நாட்டு பாடல் வெளியிடப்பட உள்ளது.

வசனம் இல்லாத டீசர்
நவம்பர் 1 ம் தேதி ஆர்ஆர்ஆர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. 45 விநாடிகள் கொண்ட இந்த வீடியோ படத்தில் நடித்துள்ள அனைத்து கேரக்டர்களையும் காட்டுவதாகவும், வசனங்கள் எதுவும் இல்லாமலும் இந்த வீடியோ வெளியிடப்பட்டது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அதே சமயம் வசனங்கள் ஏதும் இல்லாததால் இது ஏமாற்றம் தருவதாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











