twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே இப்படி ஒரு சாதனையா... சொல்லி அடிக்கும் ஆர்ஆர்ஆர்

    |

    சென்னை : டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படம் மார்ச் 25ம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதுவரை வெளியிடப்பட்ட படத்தின் டிரைலர், பாடல் ஆகியவற்றை பார்த்து விட்டு, எப்போது தியேட்டர்களில் ரிலீசாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இதுவரை வசூல் சாதனை படைத்த படங்களின் பட்டியலில் பாகுபலி முதலிடத்தில் இருந்து வந்தது. இதனை சமீபத்தில் வெளியான அஜித்தின் வலிமை தட்டி தூக்கியது. ஆனால் இதுவரை வெளியாகி வசூல் சாதனை படைத்த அத்தனை படங்களையும் ஓரங்கட்டி, ரிலீசிற்கு முன்பே பிரம்மாண்ட சாதனையை நிகழ்த்தி உள்ளது ஆர்ஆர்ஆர்.

    மாட்டை அடித்து தின்று விடுவோம்...அப்படி பட்ட பசி, இயக்குனர் எஸ்.ஏ.சி க்கு என்ன நடந்தது ? மாட்டை அடித்து தின்று விடுவோம்...அப்படி பட்ட பசி, இயக்குனர் எஸ்.ஏ.சி க்கு என்ன நடந்தது ?

    இத்தனை கோடி சம்பளமா

    இத்தனை கோடி சம்பளமா

    ஆர்ஆர்ஆர் படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி. இதில் ராம்சரண் மற்றும் ஜுனியர் என்டிஆருக்கு சம்பளமாக ரூ.80 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. டைரக்டர் ராஜமெளலிக்கு 100 கோடி சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. டிவிவி என்டர்டைன்மென்ட் பேனரில் ரிலீஸ் ஆக ஆர்ஆர்ஆர் படத்தில் ஆலியா பட், அஜய் தேவ்கன் , ஒலிவியா மோரிஸ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

    செம ப்ரொமோஷன்

    செம ப்ரொமோஷன்

    ஆர்ஆர்ஆர் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள் ஒரு புறம் படுதீவிரமாக நடந்து வருகிறது. 9 நாட்களில் 7 பெரிய நகரங்கள் என டார்கெட் வைத்து ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். மற்றொரு புறம் ப்ரீ ரிலீஸ் வியாபாரம் இந்தியாவின் பல மாநிலங்களிலும் அமோகமாக நடந்து வருகிறது. ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே பல மடங்கு லாபத்தை ஆர்ஆர்ஆர் படம் பெற்று சாதனை படைத்துள்ளதாம்.

    ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் சாதனை

    ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் சாதனை

    தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் ஆர்ஆர்ஆர் படம் 200 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 75 கோடிக்கும் அதிகமான தொகைக்கும், கேரளாவில் 20 கோடிக்கும், கர்நாடகாவில் 80 கோடிக்கும், இந்தியில் 250 கோடிக்கும், வெளிநாடுகளில் 170 கோடிக்கும் வியாபாரம் ஆகி உள்ளது. மொத்தமாக 800 கோடிக்கும் அதிகமான தொகையை ப்ரீ ரிலீஸ் வியாபாரத்திலேயே பார்த்து விட்டது ஆர்ஆர்ஆர்.

    இன்னும் டிக்கெட் விற்பனை வேறு இருக்கே

    இன்னும் டிக்கெட் விற்பனை வேறு இருக்கே

    அதே சமயம் மற்றொரு தகவலாக ப்ரீ ரிலீஸ் வியாபாரத்தில் 1200 கோடிக்கும் மேல் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ப்ரீ ரிலீஸ் வியாபாரமே பல மடங்கு லாபம் பெற்றுள்ளது என்றால் இன்னும் அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங், டிக்கெட் விற்பனை, சேட்டிலைட் உரிமம், டிஜிட்டல் உரிமம் உள்ளிட்டவைகள் உள்ளன. அவற்றையும் சேர்த்தால் ஆர்ஆர்ஆர் படத்தின் வசூல் சாதனை மற்ற எந்த படமும் தொட முடியாத உயரத்திற்கு சென்று விடும் போல் இருக்கிறது.

    English summary
    According to the latest sources, it is confirmed that RRR's pre-release business gets 800 cr. This movie breaks all previous collection records. Some other sources said that RRR collects 1200 cr in pre release business.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X