கிங் மேக்கர்களின் கனவு.. ஹீரோக்களுக்கு இணையாக ராஜமெளலிக்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட்!
ஹைதராபாத்: வரும் மார்ச் 25ம் தேதி இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஆர்ஆர்ஆர் திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில், வானளாவிய கட் அவுட்கள் நடிகர்கள் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆருக்கு தியேட்டருக்கு தியேட்டர் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரபல திரையரங்கம் ஒன்றில் இயக்குநர் ராஜமெளலிக்கு வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கட் அவுட் ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஷங்கரை மிஞ்சிய ராஜமெளலி
பிரம்மாண்ட படங்களை இயக்குவதில் தென்னிந்திய சினிமாவிலேயே பிரபலமானவர் இயக்குநர் ஷங்கர் தான். ஆனால், பாகுபலி படத்தை இயக்கி ஷங்கரை மிஞ்சிவிட்டார் இயக்குநர் ராஜமெளலி. மேலும், 500 கோடி வசூல் சாதனையை படைத்த ஷங்கரை பீட் செய்து 2000 கோடி வரை தென்னிந்திய படங்கள் வசூல் சாதனை படைக்கும் என்பதை நிரூபித்துள்ளார்.

க்யூவில் ஹீரோக்கள்
பாகுபலி படத்திற்கு பிறகு ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் உள்ளிட்ட நடிகர்கள் ஓகே சொன்ன நிலையில், ஆர்ஆர்ஆர் படத்திற்கு பிறகு ராஜமெளலி இயக்கத்தில் நடிக்க மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட டோலிவுட்டின் முன்னணி நடிகர்கள் காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பல பாலிவுட் நடிகர்களும் வாய்ப்பு கேட்டு ராஜமெளலியை நச்சரிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஹாலிவுட் வியக்கும் அளவுக்கு
இந்திய திரைப்படங்களை ஹாலிவுட்டே வியந்து பார்க்கும் அளவுக்கு பிரம்மாண்ட படைப்புகளை கொடுத்து கெத்து காட்டி வருகிறார் இயக்குநர் ராஜமெளலி. ஹாலிவுட் தரத்தில் படங்களை கொடுக்க நம்மால் முடியும் என நிரூபித்துக் காட்டி வருகிறார் ராஜமெளலி. மார்ச் 25ம் தேதி வெளியாகவுள்ள ஆர்ஆர்ஆர் படத்தை உலகின் 60 நாடுகளில் வெளியிட திட்டமிட்டுள்ளார்.

ராஜமெளலிக்கு கட் அவுட்
ராம்சரண், ஜூனியர் என்டிஆருக்கு ஆர்ஆர்ஆர் படம் வெளியாகும் அத்தனை திரையரங்குகளிலும் பெரிய கட் அவுட்டுகள் வைக்கப்பட்டு வரும் நிலையில், இயக்குநர் ராஜமெளலிக்கு பிரபல திரையரங்கம் ஒன்றில் அவரது உண்மையான ரசிகர்கள் வைத்துள்ள பிரம்மாண்ட கட் அவுட் புகைப்படம் ஒட்டுமொத்த சினிமா ஆர்வலர்கள் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கிங் மேக்கர்களின் கனவு
கேப்டன் ஆப் தி ஷிப் என கொண்டாடப்படும் இயக்குநர்கள் ஏகப்பட்ட சினிமா ராஜாக்களை உருவாக்கும் கிங் மேக்கர்களாக உள்ளனர். ஒவ்வொரு கிங் மேக்கரின் கனவும் இதுபோல தனது திரைப்படங்கள் வெளியாகும் போது தன்னுடைய கட் அவுட் இடம்பெறுமா என்பது தான். ஆனால், அதனை சாதித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜமெளலி என்பது ஒட்டுமொத்த இயக்குநர்களும் பெருமைப்பட வேண்டிய தருணமாகவே பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











