Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அஜித்தின் வலிமை vs ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் டிரைலர் எது சூப்பரா இருக்கு? ஒரு சின்ன அலசல்!
சென்னை: வரும் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் வலிமை மற்றும் ஆர்.ஆர்.ஆர் படங்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video
நடிகர் அஜித்தின் வலிமை டிரைலர் வெளியாகி உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் டிரைலரையும் வலிமை டிரைலரையும் ரசிகர்கள் கம்பேர் செய்து வருகின்றனர்.
உண்மையிலேயே இரண்டு டிரைலர்களில் எது சூப்பராக இருக்கு என்பது குறித்து ஒரு சின்ன அலசல் இதோ..
வலிமைன்றது
அடுத்தவன
காப்பாத்த
தான்
அழிக்க
இல்ல..
வாணவேடிக்கை
நடத்தும்
வலிமை
டிரைலர்
எப்படி
இருக்கு?

பல கோடி பிரம்மாண்டம்
பாகுபலி படத்தை இயக்கிய இயக்குநர் எஸ்.எஸ். ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ் என பல கோடி பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம். அதன் மிரட்டலான டிரைலர் சமீபத்தில் வெளியானது.

8 மில்லியன் தான்
ஆர்.ஆர்.ஆர் படத்தின் தெலுங்கு டிரைலர் 40 மில்லியனை கடந்துள்ள நிலையில், அதன் தமிழ் டிரைலர் லைகா யூடியூப் சேனலில் வெளியாகி 3 வாரங்கள் ஆன நிலையில், வெறும் 8 மில்லியன் பார்வைகளை மட்டுமே கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வலிமை டிரைலர் வெளியான சில மணி நேரங்களிலேயே 3 மில்லியன் பார்வைகளை கடந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

சிஜி மேஜிக்
இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் டிரைலர் அதிகப்படியான சிஜி மேஜிக் உடனே வெளியாகி உள்ளது டிரைலரை பார்த்தாலே தெரிகிறது. போலீஸ் அதிகாரியாக காட்சியளிக்கும் ராம்சரண் கிளைமேக்ஸில் ராமர் போல வேடமணிந்து வில்லெடுத்து ஆங்கிலேயர்களை வீழ்த்தும் காட்சிகள் எல்லாம் பிரம்மிப்பின் உச்சம் தான்.

ரியாலிட்டி தெரியுது
ஆனால், அதே நேரத்தில் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள வலிமை படத்தின் டிரைலரை பார்த்தால் ஒவ்வொரு காட்சியிலும் ரியாலிட்டி தெரிகிறது. வானத்தில் பறக்கும் பைக் ஸ்டன்ட் காட்சிகள் எல்லா சிஜி மேஜிக் இல்லாமல் ரியாலிட்டி ஸ்டன்ட் காட்சிகளாக இருப்பது படத்திற்கு மிகப்பெரிய வலிமையை கூட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

புல்லட்டை கையில் சுழற்றுவது
புலியின் வாயை பிளப்பது, புல்லட்டை வெறும் கையால் சுழற்றுவது போன்ற தெலுங்கு சினிமாவுக்கே உரித்தான மசாலா காட்சிகள் அஜித் குமாரின் வலிமை படத்தில் இல்லை என்பது மிகப்பெரிய ஆறுதல். வலிமை டீசரை பார்த்த ரசிகர்கள் விவேகம் 2 என கலாய்த்த நிலையில், வலிமை டிரைலரை விஜய் ரசிகர்களும் பாராட்டும் அளவுக்கு எடிட்டர் விஜய் வேலுக்குட்டி கட் செய்துள்ளார்.

சிங்கம் சிங்கிளாத்தான் வரும்
சிவாஜி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சொல்வது போல ஆர்.ஆர்.ஆர் எனும் பல கோடி பிரம்மாண்டத்தை எதிர்க்க சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்பது போல நடிகர் அஜித் மட்டுமே டிரைலர் முழுக்க ஆக்ஷனில் அனல் பறக்க விட்டு இருப்பது அண்டர்லைன் பண்ண வேண்டிய ஒன்று.

பாக்ஸ் ஆபிஸ் போட்டி
ஆர்.ஆர்.ஆர் படத்தின் மற்ற ஏரியா வசூலை விட தமிழ்நாட்டில் பாகுபலி அளவுக்கு அதன் வசூல் இருக்குமா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால் ஒரே வாரத்தில் நடிகர் அஜித்தின் வலிமை படம் வெளியானால் ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸும் அஜித் படத்திற்கு தான் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பொங்கல் கிளாஷில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் அஜித்தின் வலிமை படங்களுக்கு இடையேயான போட்டி எப்படி இருக்கப் போகிறது என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.