»   »  தமிழில் ரூ 150 கோடி வசூலித்த படங்களில் 5-ல் நான்கு ரஜினி படங்கள்தான்!!

தமிழில் ரூ 150 கோடி வசூலித்த படங்களில் 5-ல் நான்கு ரஜினி படங்கள்தான்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் இதுவரை ரூ 150 கோடி வரை வசூல் செய்த 5 படங்களில் நான்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்தவைதான் என்ற பாக்ஸ் ஆபீஸ் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் ரூ 100 கோடி வசூல் என்ற புதிய சரித்திரத்தைத் தொடங்கி வைத்தவர் ரஜினிகாந்த்தான்.

Rs 150 cr club: Rajinikanth's 4 movies in top 5 list

அவரது சந்திரமுகி படம்தான் உலக அளவில் ரூ 100 கோடியை வசூலித்த முதல் திரைப்படமாகும். தென்னிந்திய சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படமும் சந்திரமுகிதான்.

அடுத்து வெளியான சிவாஜி படம் ரூ 158 கோடிகளை வசூலித்து அடுத்த சாதனையை நிகழ்த்தியது. தமிழில் ரூ 150 கோடிகள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் படம் சிவாஜிதான்.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ரஜினியின் எந்திரன் படம் இந்தியத் திரையுலகில் அதிக வசூல் குவித்த படமாக சாதனைப் புரிந்தது. அந்தப் படம் ரூ 375 கோடிகளைக் குவித்தது. இது மும்பை பங்குச் சந்தையிலும் பதிவாகியுள்ளது.

எந்திரனுக்குப் பிறகு கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான லிங்கா படத்தின் வசூல் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவினாலும், அந்தப் படம் ரூ 165 கோடிகளை வசூலித்ததாக பாக்ஸ் ஆபீஸில் பதிவாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் வெளியான ஐ படமும் ரூ 150 கோடிகளைக் குவித்தது.

ரஜினி நடிப்பில் கடந்த ஜூலையில் வெளியான கபாலி படம் உலகெங்கும் ரூ 600 கோடிகளை வசூலித்ததாகக் கூறப்படுகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக அனைத்து புள்ளிவிவரங்களும் அறிவிக்கப்படாவிட்டாலும், பாகுபலி உள்ளிட்ட அனைத்துப் பட வசூல் சாதனைகளையும் கபாலி முறியடித்துள்ளது.

ஆக, ரூ 150 கோடி வசூலித்த 5 தமிழ்ப் படங்களில் நான்கு ரஜினிகாந்த் நடித்தவை என்பது தென் இந்தியத் திரையுலகில் யாருக்கும் கிடைக்காத சிறப்பாகும்.

English summary
Superstar Rajinikanth's 4 movies entered in 150 cr club in top 5 movies list.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil