»   »  ரூ. 3 கோடி ஊழல் செஞ்சோம், வாராகி பார்த்தாரு: சீறும் விஷால்

ரூ. 3 கோடி ஊழல் செஞ்சோம், வாராகி பார்த்தாரு: சீறும் விஷால்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சங்கத்தில் ரூ. 3 கோடி அளவுக்கு ஊழல் எதுவும் நடக்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்று ஒரு ஆண்டு முடிவதற்குள் ரூ. 3 கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளது என நடிகரும், பத்திரிகையாளருமான வாராகி என்பவர் பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து நடிகர் சங்க செயலாளர் விஷால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஊழல்

ஊழல்

நடிகர் சங்கத்தில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. ரூ. 3 கோடி ஊழல் நடந்துள்ளதாக கூறுவது ஆதாரமற்ற புகார் ஆகும். அதற்கு ஆதாரம்
இருந்தால் வெளியிட்டு நிரூபிக்கலாமே.

வாராகி

ஊழல் புகார் கூறிய வாராகி எந்த படத்தில் நடித்துள்ளார் என்று எனக்கு தெரியவில்லை. எந்த புகாரையும் ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.

ஆதாரம்

ஆதாரம்

முந்தைய நிர்வாகத்தின் ஊழல்களுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது. முந்தைய நிர்வாகத்தின் ஊழல்கள் குறித்து இன்னும் 10 நாட்களில்
ஆதாரத்துடன் தகவல்கள் வெளியிடுவோம்.

கணக்கு

கணக்கு

நடிகர் சங்கம் தொடர்பான கணக்குகள் அலுவலகத்தில் உள்ளது. அதை எந்த நடிகர் வேண்டுமானாலும் வந்து பார்க்கலாம். எதுவாக இருந்தாலும்
நேரில் வந்து பேசினால் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்கும்.

English summary
Actor Vishal said that actor Varahi's accusation of Rs. 3 crore scam is baseless.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil