»   »  30 கோடி... 100 நாட்கள்... பிரமிப்பு தரும் பாகுபலி 2 க்ளைமாக்ஸ் போர்!

30 கோடி... 100 நாட்கள்... பிரமிப்பு தரும் பாகுபலி 2 க்ளைமாக்ஸ் போர்!

Posted By: Rajiv
Subscribe to Oneindia Tamil

பாகுபலி 2ம் பாகத்திற்கான கிளைமேக்ஸ் போர்க் காட்சியை மயிர்க்கூச்செறியும் வகையில் படமாக்குகிறாராம் இயக்குநர் ராஜமவுலி.

பாகுபலி மூலம் உலகத்தையே இந்திய சினிமா நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார் எஸ்.எஸ்.ராஜமவுலி. இப்போது பாகுபலி 2ம் பாகத்தில் பிஸியாக இருக்கிகிறார் ராஜமவுலி.

ஒருபக்கம் அவரது அடுத்த படத்தைப் பற்றிய செய்திகள் ஒருபக்கம் றெக்கை விரிக்கிறது. ஆனால் அவரோ அதைப் பற்றிய கவலையே இல்லாமல் இரண்டாம் பாகத்துக்கான க்ளைமாக்ஸ் காட்சிகளுக்காக திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார்.

100 நாள் கிளைமேக்ஸ்

100 நாள் கிளைமேக்ஸ்

முதல் பாகம் கொடுத்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகத் தீவிரமாக இருக்கும் ராஜமவுலி இந்த க்ளைமாக்ஸுக்கு மட்டும் நூறு நாட்களை ஒதுக்கி இருக்கிறார்.

எண்ணிக்கை கூடலாம்

எண்ணிக்கை கூடலாம்

முதல் பாக க்ளைமாக்ஸும் நூறு நாட்கள்தான் எடுத்துக் கொண்டது. எனவே எடுக்கப்படும் வேகத்தை பொறுத்து இந்த நாட்கள் எண்ணிக்கை கூடலாம்.

ரூ. 30 கோடி பட்ஜெட்

ரூ. 30 கோடி பட்ஜெட்

முதல் பாகத்துக்கான க்ளைமாக்ஸ் போருக்கான செலவு மட்டும் 15 கோடி ரூபாய். இந்த முறை அதனைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு க்ளைமாக்ஸ் இருக்க வேண்டும் என்பதால் முப்பது கோடியை பட்ஜெட்டாக நிர்ணயித்துள்ளார்.

வாள் பிடிக்கும் அனுஷ்கா, தமன்னா

வாள் பிடிக்கும் அனுஷ்கா, தமன்னா

இந்த பாகத்தில் ஹீரோக்களுக்கு சமமாக அனுஷ்கா, தமன்னாவுக்கும் சண்டைக் காட்சிகள் இருப்பதால் இருவருக்கும் வாள்சண்டை, குதிரையேற்றம் போன்ற பயிற்சிகள் இப்போதிலிருந்தே தொடங்கிவிட்டது.

ஏற்கனவே தமன்னா தான் பயிற்சி பெறும் குதிரையுடன் ரொம்ப தோஸ்த் ஆகி விட்டதாக செய்திகள் வந்தது நினைவிருக்கலாம்.

    English summary
    Sources revealed that director SS Rajamouli is planning the climax war of Bahubali 2 at the cost of Rs 30 cr.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil