»   »  அமீர்கானின் பிகேவை முறியடித்த ரஜினியின் 2.0: ரூ. 330 கோடிக்கு இன்சூரன்ஸ்!

அமீர்கானின் பிகேவை முறியடித்த ரஜினியின் 2.0: ரூ. 330 கோடிக்கு இன்சூரன்ஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 2.0 படம் ரூ. 330 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்திய அளவில் ஒரு சாதனையாக மதிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு அமீர் கானின் பிகே படம் ரூ. 300 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. அதன் சாதனையை 2.0 முறியடித்துள்ளதாம்.

ரஜினிகாந்த் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் படம் 2.0 . இது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறப்படுகிறது. எந்திரன் என்ற தலைப்பை முதலில் தயாரித்த நிறுவனம் அளிக்க மறுத்து விட்டதாலேயே இந்த படத்திற்கு 2.0 என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.


நூற்றுக்கணக்கான கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படங்கள் கடைசி நேரத்தில் பல சிக்கல்களுக்கு ஆளாகிறது. குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியாமல் போவதால் தயாரிப்பாளர்கள் கடனில் சிக்குகின்றனர். எனவே இதேபோன்றதொரு நிலை 2.0 படத்திற்கு ஏற்படாத வகையில் இந்த படம் ரூ. 330 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளதாம்.


ரஜினி - அக்சய் குமார்

ரஜினி - அக்சய் குமார்

ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைக்கிறார். வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். முத்துராஜ் கலை இயக்குநராகவும் படத் தொகுப்பாளராக ஆண்டனியும் ஒலி வடிவமைப்பாளராக ஆஸ்கர் விருது பெற்ற ரசூல் பூக்குட்டியும் பணியாற்றுகிறார்கள்.


ரூ.350 கோடி தயாரிப்பு

ரூ.350 கோடி தயாரிப்பு

இந்தப் படத்தை ரூ. 350 கோடி செலவில் லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் பங்கேற்கும் ரஜினி, அக்‌ஷய் குமார், ஏமி ஜாக்ஸன், ஷங்கர் ஆகிய நான்கு பேரின் சம்பளம் மட்டுமே மொத்தமாக ரூ. 150 கோடி வரை வரும் என்பதால் இந்த அளவிலும் இந்தப் படம் சாதனை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.


ரூ. 350கோடிக்கு இன்சூரன்ஸ்

ரூ. 350கோடிக்கு இன்சூரன்ஸ்

தமிழில் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படமான 2.0க்கு மேலும் ஒரு சிறப்பு சேர்க்கும் வகையில், ரூ. 330 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய அளவில் ஒரு சாதனையாக மதிப்பிடப்படுகிறது. இதற்கு முன்பு அமீர்கானின் பிகே படம் ரூ. 300 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டது. அதன் சாதனையை 2.0 முறியடித்துள்ளது.


முதலுக்கு மோசம் வராது

முதலுக்கு மோசம் வராது

குறித்த நேரத்தில் படம் வெளிவராமல் போனாலோ, மோசமான காலநிலை, இயற்கைப் பேரிடரால் படம் பாதிக்கப்பட்டாலோ இந்தக் காப்பீட்டின் மூலம் இழப்பீடு கிடைக்கும் என்பதால் 2.0 படம் பெரிய தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.


English summary
Rajinikanth star vehicle 2.0 or Enthiran 2 (Robot 2) has been tipped as India's most expensive film ever.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil