»   »  ரூ 350 கோடிக்கு இன்சூரன்ஸ்.... ரஜினியின் 2.ஓ படம் புதிய சாதனை!

ரூ 350 கோடிக்கு இன்சூரன்ஸ்.... ரஜினியின் 2.ஓ படம் புதிய சாதனை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் 2.0 திரைப்படம் ரூ. 350 கோடிக்கு காப்பீடு செய்யப்பட்டு புதிய சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்தப் படமும் இவ்வளவு பெரும் தொகைக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டதில்லை.

முன்பெல்லாம் உயிருக்கு இன்சூரன்ஸ் எடுக்கவே பலரும் யோசிப்பார்கள். இப்போது உடமைகள், சொத்துகள், வர்த்தகங்கள் என பல விஷயங்களுக்கு காப்பீடு செய்கிறார்கள்.


Rs 350 cr insurance for Rajinikanth's 2.O

சினிமாக்களுக்கும் இப்போது இன்சூரன்ஸ் செய்ய ஆரம்பித்துள்ளனர். முன்பு ரஜினி நடிக்க எந்திரன் படத்துக்கும் ரூ 100 கோடிக்கு இன்சூரன்ஸ் செய்தது நினைவிருக்கலாம்.


அதன் பிறகு ராஜமௌலி தன் பாகுபலி படத்துக்கு 110 கோடிக்கு காப்பீடு செய்தார்,


தற்போது இந்தியாவிலேயே மிக அதிகபட்சமாக ரூ. 350 கோடிக்கு இன்ஷூர் செய்யப்பட்ட படமாக ரஜினியின் 2.0 திகழ்கிறது. இதற்கு அமீர்கான் நடித்த பிகே படத்துக்கும் ரூ. 300 கோடியில் இன்ஷூரன்ஸ் எடுக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்தது.

English summary
Superstar Rajinikanth's 2.O has been insured for Rs 350 cr.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil