»   »  மோடியின் பணஒழிப்பை மையப்படுத்தி உருவாகிறதா ‘ரூபாய்’ ?

மோடியின் பணஒழிப்பை மையப்படுத்தி உருவாகிறதா ‘ரூபாய்’ ?

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரே இரவில் 500 & 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததை யாரும் மறந்திருக்க மாட்டோம். ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் ஏடிஎம் வாசலிலும், வங்கிகளிலும் காத்துக் கிடந்த அவலம் அவ்வளவு எளிதாக மறக்கக் கூடிய விசயமா என்ன?

இந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி திரைக்கு வரும் 'ரூபாய்' திரைப்படம் டிமானிடைசேசன் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிரானதா?


Rubai.. A movie on demonitisation

இயக்குநர் எம் அன்பழகன் மிகத் தெளிவானவர். 'சாட்டை' எடுத்துச் சுழற்றியவர். அவர் கூறியது: 'ரூபாய்' திரைப்படம் பணம் பற்றியதுதான். ஆனால், நேரடியாக மத்திய அரசைத் தாக்கி எடுத்த படமல்ல. தவறான வழியில் வில்லன் சம்பாதித்த பணம், நடுத்தர, ஏழை மக்களfடம் அதாவது சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் மாதிரி ஆட்களிடம் சிக்கும்போது அவர்கள் படும் பாடு, இறுதியில் அந்தப் பணத்தை எப்படி ஒப்படைக்கிறார்கள், அந்தப் பணம் எப்படி அதிகாரிகளால் பிடிக்கப்படுகிறது என்பதை சுவாரஸ்யத்துடன் சொல்லியிருக்கிறோம்.


Rubai.. A movie on demonitisation

சென்னை, தேனி வழியாக கேரளா என்று பயணப்படும் படம், காசு கொடுத்துத் தியேட்டரில் பார்ப்பவர்களூக்கும் பயன்படும். சும்மா சொல்லக்கூடாது.. சந்திரன், ஆனந்தி, சின்னி ஜெயந்த் இவர்களோடு வில்லனும் போட்டிபோட்டு நடிப்பில் அசத்தியிருக்கிறார்கள். ரசிகர்களூக்கு 'ரூபாய்' திரைப்படம் பலவிதமான கூட்டு, பொரியல்களோடு பரிமாறப்படும் சுவையான விருந்தாக இருக்கும்.


எதேச்சையாகப் படத்தைப் பார்த்த 'இ5 எண்டர்டெயின்மெண்ட்' திரைப்படக் கம்பெனியின் உரிமையாளர் ஜெயகிருஷ்ணன், அந்த இடத்திலேயே அட்வான்ஸ் கொடுத்துவிட்டார். அவர்தான் தமிழகமெங்கும் படத்தை வெளியிடுகிறார்".

English summary
Rubai is the title of a new movie based on demonitisation

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil