விநாயகர் சதுர்த்திக்கு அசத்த வருது ‘ருத்ர தாண்டவம் ‘முதல் பாடல்!
சென்னை : திரெளபதி படத்தின் வெற்றியை தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ருத்ர தாண்டவம்.
இப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி, நாயகனாகவும் அவருக்கு ஜோடியாக தஸ்தா குப்தாவும் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாக நடித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ள அம்மாடி என்ற பாடல் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

திரௌபதி
ஜி.எம். ஃபிலிம்ஸ் தயாரிப்பில் மோகன் ஜி இயக்கத்தில் உருவான திரௌபதி திரைப்படம் கடந்த 2020ஆம் ஆண்டு வெளியானது. ஒருதரப்பினர் மத்தியில் இப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் நிலவிய போதிலும், வணிகரீதியாக இப்படம் கணிசமான வெற்றியைப் பெற்றது.

முக்கிய கதாபாத்திரத்தில்
திரௌபதி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, திரௌபதி கூட்டணி ருத்ர தாண்டவம் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இப்படத்தில் ரிஷி ரிச்சர்டு நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சின்னத்திரை புகழ் தர்ஷா குப்தா நடித்துள்ளார். ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

யூ/ஏ சான்றிதழ்
ஜீபின் இசையமைத்துள்ளார். யூ/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள இப்படத்தின் தமிழக உரிமையை 7ஜி ஃபிலிம்ஸ் சிவா கைப்பற்றியுள்ளார். மொத்த வெளிநாட்டு ரிலீஸ் மற்றும் ஆடியோ ரிலீஸ் உரிமையை ஐங்கரன் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முதல் பாடல்
இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்ட நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியீடு குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, பிரபல இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் பாடியுள்ள அம்மாடி என்ற பாடல் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.

டிரைலர் சர்ச்சை
இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் கிறிஸ்தவ சமுதாயத்தினரிடையே இந்த ட்ரெய்லர் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது. கிறிஸ்தவர்களை அச்சுறுத்தும் படியாகவும் மதக்கலவரத்தை தூண்டும் படியாகவும் அமைந்திருக்கிறது ருத்ரதாண்டவம் படத்தின் டிரைலர். ஆகவே மதக்கலவரத்தை தூண்டும் இந்த படத்தை தடை செய்ய வேண்டும். இந்த படத்தை இயக்கிய மோகன் ஜி கைது செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார். திரௌபதி படம் வெளியாகி பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், வெளிவருவதற்கு முன்பாகவே சர்ச்சைகளை சந்தித்து வருகிறது ருத்ரதாண்டவம்.

கதாநாயகி
குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபலமான தர்ஷா குப்தா முதல் முதலாக இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.


Click it and Unblock the Notifications











