»   »  பாகுபலிக்கு இணையான வரவேற்பு.. கோடிகளைக் குவிக்கும் ருத்ரமாதேவி!!

பாகுபலிக்கு இணையான வரவேற்பு.. கோடிகளைக் குவிக்கும் ருத்ரமாதேவி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் பாகுபலிக்கு நிகரான வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது அனுஷ்கா நடித்த வரலாற்றுப் படமான ருத்ரமாதேவி.

காகதீய வம்ச ராணியான ருத்ரமாதேவியின் வரலாற்றை அடிப்படையாக வைத்து குணசேகர் இயக்கிய படம் ருத்ரமாதேவி. இளையராஜா இசையமைத்திருந்தார்.


Rudramadevi rocks at AP, Telangana BO!

இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பிலிருந்த இந்தப் படம் கடந்த 9-ந்தேதி தெலுங்கில் ரிலீஸ் ஆனது. தெலுங்கானா, ஆந்திரா பகுதியை ஆண்ட வீரமங்கையின் படம் என்பதால், அந்த மாநிலங்களில் இந்த படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. இன்னும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பு வெளியாகவில்லை. நாளை மறுநாள் உலகெங்கும் இதன் தமிழ்ப் பதிப்பு வெளியாகிறது.


இந்த படம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்துள்ளன என்றாலும், திரையிட்ட இடங்களில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


முதல் நாளில் மட்டும் ரூ 20 கோடியைக் குவித்தது இந்தப் படம், முதல் வார முடிவில் உலகெங்கும் ரூ 48 கோடியைக் குவித்திருக்கிறது. தெலுங்கானா, ஆந்திரா மற்றும் சில மாநிலங்களில் மட்டும் ரூ 32 கோடி இந்தப் படத்துக்கு வசூலாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இந்தப் படத்தின் மொத்த பட்ஜெட்டே ரூ 60 கோடிதான் என்பதால், படம் பெரிய லாபத்தைப் பெற்றுத் தரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

English summary
Anushka starrer Rudramadevi has collected Rs 48 cr worldwide in its first weekend.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil