»   »  ரம் படப்பிடிப்பு முடிந்தது... இறுதி நாளில் கபாலி டீசர் ஒளிபரப்பி கொண்டாட்டம்!

ரம் படப்பிடிப்பு முடிந்தது... இறுதி நாளில் கபாலி டீசர் ஒளிபரப்பி கொண்டாட்டம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

உலகெங்கும் காட்டு தீ போல் வேகமாக பரவி வரவும் 'நெருப்புடா' ரம் திரைப் படக் குழுவினரையும் விட்டு வைக்க வில்லை.

ரிஷிகேஷ், அஞ்சாதே நரேன், விவேக், மியா , சஞ்சிதா ஷெட்டி, அம்ஜத்,அர்ஜுன் சிதம்பரம் என ஒரு உற்சாக கூட்டம் நடித்திருக்கும் இந்தப் படத்தின் இறுதி நாள் படப்பிடிப்பு வியாழன் அன்று நடந்தது.


Rum crew celebrates wrap up with Kabali teaser

இடைவிடாமல் 60 இரவுகள் பணியாற்றிய சோர்வு இருந்தாலும், படப்பிடிப்பு நன்றாக முடிந்து, படமும் நன்றாக வந்து இருக்கிறது என்கிற உற்சாகம் இந்த இளம் படப்பிடிப்புக்கு குழுவினருக்கு இருந்ததால் அதை கொண்டாட விரும்பினார்களாம்.


Rum crew celebrates wrap up with Kabali teaser

விவேக் இருக்குமிடத்தில் ஐடியாவுக்கா பஞ்சம்... ஊரே கொண்டாட போகும் ரஜினியின் 'கபாலி ' டீசரை நாமும் பார்த்துக் கொண்டாடலாம் என்று விவேக் கூறியிருக்கிறார்.இந்த ஐடியா நெருப்பு போல் கொண்டது. படப்பிடிப்பு குழுவினரின் வேண்டுகோளுக்கு இணங்க தயாரிப்பாளர் விஜயராகவேந்திராவும் உடனடியாக ஒரு பெரிய ஸ்க்ரீன் ஏற்பாடு செய்து 'கபாலி' டீசர் பார்க்க ஏற்பாடு செய்தார்.


படப்பிடிப்பை துரிதமாக முடித்து உற்சாகக் குரல் எழுப்பிய 'ரம்' படப்பிடிப்பு குழுவினர் 'கபாலி' டீசருக்கு வரவேற்புக்கு கொடுத்து மகிழ்ந்தார்களாம்.

English summary
The team of Rum new movie has celebrated the wrap up of the shoot with Rajini's Kabali teaser
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil