இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிக்கு என்ன ஆச்சு? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்!

சென்னை: தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ். இவருக்கு உலகளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

கீ-போர்டு இசைக்கலைஞரான ஹாரிஸ் ஜெயராஜ், ஏ.ஆர்.ரகுமான், ராஜ்கோட்டி, மணிசர்மா, கார்த்திக் ராஜா, வித்யாசாகர் போன்றவர்களுடன் பணியாற்றி உள்ளார். 2001 ஆம் ஆண்டு மின்னலே திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தில் இடம் பெற்ற 'வசீகரா' முதல் அனைத்து பாடல்களும் இன்று இளசுகள் கொண்டாடும் பாடலாக உள்ளது. முதல் படத்தின் வெற்றியைச் தொடர்ந்து லேசா லேசா, சாமி, கோவில், காக்க காக்க, உள்ளம் கேட்குமே, அந்நியன், உன்னாலே உன்னாலே, என்னை அறிந்தால் என பல முன்னணி நடிகர்களில் படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர் என பெயர் எடுத்துள்ளார்.

Harris Jayaraj rumours
Photo Credit:

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: இந்நிலையில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் கடத்தப்பட்டதாக ஒரு செய்தி இணையத்தில் பரவி வருகிறது. அதாவது அவரை, தயாரிப்பு நிறுவனம் ஒரு படத்திற்காக அவரை கமிட் செய்து இருந்தனர். ஆனால், ஹாரிஸ் ஜெயராஜ் பாடல் அளிக்காததால், அந்தப் படத்தின் தயாரிப்பு குழு கடும் அதிருப்தியடைந்துள்ளது. பலமுறை அவரிடம் கேட்டும் இசையை வழங்காததால், அவர்கள் கோபத்தின் உச்சிக்குச் சென்று ஹாரிஸ் ஜெயராஜை கடத்தியதாக தகவல் வெளியாகி அது காட்டுத் தீ போல பரவியது. அதே போல அவர் கடத்தப்பட்ட வீடியோ ஒன்றும் இணையத்தில் வெளியாகி, திரைப்படத் துறையில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

என்ன ஆச்சு அவருக்கு: இணையத்தில் பரவி வந்த இந்த தகவல் குறித்து நடிகர் ஆர்யா தனது எக்ஸ் தள பக்கத்தில், படப்பிடிப்பை முடிந்து விட்டு இன்று தான் திரும்பி வந்தேன். வந்ததுமே, ஹரிஷ் சார் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டேன்! என்ன நடக்கிறது? என பதிவிட்டு இருந்தார். இதைப்பார்த்த இணையவாசிகள் ஹாரிஸ் ஜெயராஜூக்கு என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர். ஆனால், இது ஒரு விளம்பர யுக்தி என்பதும், அவர் என்றாகத்தான் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X