»   »  நடிகர் சந்தானம் - நடிகை ஆஷ்னா திருப்பதியில் ரகசிய திருமணம் – வதந்தியால் பரபரப்பு

நடிகர் சந்தானம் - நடிகை ஆஷ்னா திருப்பதியில் ரகசிய திருமணம் – வதந்தியால் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பதியில் நடிகர் சந்தானமும் நடிகை ஆஷ்னா சாவேரியும் இன்று ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதாக வதந்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் ஆகிய படங்களில் சந்தானம் ஜோடியாக நடித்தவர் ஆஷ்னா சாவேரி. சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் படத்தை லொள்ளுசபா இயக்குநர் ராம்பாலா இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியும் ஆஷ்னா சாவேரிதான்.

Rumour on Santhanam's second marriage rocks Kollywood

இந்த நிலையில் சந்தானத்துக்கும், ஆஷ்னா சாவேரிக்கும் திருப்பதியில் திருமணம் நடைபெற்றதாக வதந்தி பரவியது. வாட்ஸ்அப்பிலும் இந்த படங்கள் உலா வந்தன.

இதுகுறித்து ஆஷ்னா தரப்பில், திருப்பதியில் எதிர்பாராதவிதமாகத்தான் அவர் சந்தானத்தைச் சந்தித்தார். ஆஷ்னா தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும் திருப்பதி செல்வது வழக்கம். அப்போது அங்கு இயக்குநருடன் திருப்பதிக்கு வந்த சந்தானத்தை சந்திக்க நேர்ந்தது. அதன் புகைப்படம் தான் இணையத்தில் வெளியானது என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.

இதேபோல சந்தானம் தரப்பிலோ, ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் சந்தானம் நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் சாமி கும்பிடுவதற்கு திருப்பதி கோவில் சென்றார். அவருடன், 'இனிமே இப்படித்தான்' படக்குழுவினர் 14 பேரும் திருப்பதிக்கு சென்றார்கள். அந்த குழுவில், ஆஷ்னா சாவேரியும் இருந்தார். சாமி கும்பிடத்தான் அவர் வந்திருந்தார். அவருடைய தாயாரும் உடன் இருந்தார். சந்தானத்துக்கும், ஆஷ்னா சாவேரிக்கும் காதலும் இல்லை. கல்யாணமும் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

English summary
A rumour on actor Santhanam's second marriage with her co actress has rocked Kollywood today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil