Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் இவர்கள் தானா...இணையத்தில் பரவும் பிரபலங்களின் லிஸ்ட்
சென்னை : விஜய் டிவியில் பாப்புலரான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்கள் முடிவடைந்து விட்டன. இந்த 5 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் சீசன் 5 ல் ராஜு டைட்டிலை வென்றார். பிரியங்கா ரன்னர் அப் ஆனார். இதைத் தொடர்ந்து ஓடிடி வெர்சனாக ஒளிபரப்பப்பட்ட பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியும் முடிவடைந்து விட்டது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 எப்போது துவங்கும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கிறார்கள். முதலில் அக்டோபர் மாதம் துவங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6, தற்போது நவம்பர் மாதத்திற்கு தள்ளி போய் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஆனால் எப்போது துவங்க போகிறார்கள், யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்ள போகிறார்கள் என்பது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியிடப்படவில்லை.
நான் போட்ட முதல் ட்யூன் இது தான்.. வெட்கப்பட்டு சிரித்த விஜய் ஆண்டனி.. அட நல்லா தானே இருக்கு!

தீயாய் பரவும் லிஸ்ட்
இதற்கிடையில் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்களாக விஜய் டிவி தொகுப்பளர் ரக்ஷன் உள்ளிட்ட சிலர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகின. அப்படி யாருடைய பெயரெல்லாம் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்டில் அடிபடுகிறது என்பதை இங்கே பார்க்கலாம். இவர்களில் யாரெல்லாம் இறுதி போட்டியாளர்கள் லிஸ்டில் இடம்பெற போகிறார்கள், இன்னும் யாரெல்லாம் சேர போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரக்ஷன்
விஜய் டிவியில் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ரக்ஷன். பிக்பாஸ் 6 பேச்சு துவங்கியது முதலே இவருடைய பெயர் தான் போட்டியாளர்கள் லிஸ்டில் சொல்லப்பட்டு வந்தது. முந்தைய சீசன்களிலேயே இவர் கலந்து கொள்வார் என எதிர்பார்ககப்பட்டது. தற்போது குக் வித் கோமாளி 3 சீசன்களும் முடிந்து விட்டது. இதனால் ரக்ஷன், பிக்பாஸ் 6 ல் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், சமீபத்தில் ரக்ஷன் புதிய படம் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க கமிட்டாகி உள்ளார். இதன் ஷுட்டிங் விரைவில் துவங்கப்பட உள்ளதால் ரக்ஷன் போட்டியாளர்கள் லிஸ்ட்டில் இருப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவு.

ராஜலட்சுமி
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தனது கணவர் செந்திலுடன் இணைந்து பாடி டைட்டில் வென்ற ராஜலட்சுமியின் பெயரும் பிக்பாஸ் 6 போட்டியாளர்கள் பட்டியலில் அடிபடுகிறது. வேல்முருகன், சின்னபொண்ணு என ஒவ்வொரு சீசனுக்கும் ஒரு நாட்டுப்புற பாடகரை அழைத்து வருவதால் இந்த சீசனில் ராஜலட்சுமி இடம்பெறலாம் என சொல்லப்படுகிறது. ஆனால் ராஜலட்சுமியும் - செந்திலும் தற்போது பல கச்சேரிகளில் மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்கள்.

கார்த்திக் குமார்
கேகே என செல்லமாக அழைக்கப்படும் பாடகரும், ஸ்டான்ட் அப் காமெடியன், பாடகர், பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமாரின் பெயரும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளர்கள் லிஸ்ட்டில் சொல்லப்படுகிறது. இதுவரை சோஷியல் மீடியாவில் பரவி உள்ள தகவல்களின், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இவருடன் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
Recommended Video

டிடி நீலகண்டன்
கடந்த சீசனில் விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளினியான பிரியங்கா தேஷ்பாண்டே கலந்து கொண்டதால் இந்த சீசனில் டிடியை.,விஜய் டிவி களம் இறக்கும் என சொல்லப்படுகிறது. காஃபி வித் டிடி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி டிடி, தற்போது பெரிய படங்களின் விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். அதோடு சுந்தர்.சி தற்போது இயக்கி வரும் காஃபி வித் காதல் படத்திலும் டிடி முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இன்னும் சில படங்களில் நடிக்க இவரிடம் பேசப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது. அதனால் பிக்பாஸ் சீசன் 6 ல் இவர் களமிறங்குவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.