இந்த சீன்லாம் இருந்தா போர் அடிக்கும்… டென்ஷன் ஆன SK… பிரின்ஸ் படத்தில் 12 நிமிட காட்சிகள் கட்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நாளை ( அக் 21 ) திரையரங்குகளில் வெளியாகிறது. .

அனுதீப் இயக்கியுள்ள பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், பிரின்ஸ் படத்தில் சில காட்சிகளை பார்த்த சிவகார்த்திகேயன், கொஞ்சம் டென்ஷன் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

SK-வின் பிரின்ஸ்

SK-வின் பிரின்ஸ்

டாக்டர், டான் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் நாளை வெளியாகிறது. பிரின்ஸ் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இந்தப் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் உட்பட ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

பிரின்ஸ் கதை இதுதான்?

பிரின்ஸ் கதை இதுதான்?

பிரின்ஸ் படத்தின் கதைக்களம் பாண்டிச்சேரியில் தொடங்கி லண்டன், ஃபிரான்ஸ் என பயணிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரொமாண்டிக்கல் ஜானரில் கமர்சியலாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். இந்தப் படத்தில் சத்யராஜும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரின்ஸ் கமர்சியலாக இருந்தாலும், அதில் முக்கியமான மெசேஜ் இருப்பதாக சிவகார்த்திகேயனே கூறியிருந்தார். ஆனாலும், இந்தப் படம் ரசிகர்களுக்கு போர் அடிக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

தேவையில்லாத காட்சிகள்

தேவையில்லாத காட்சிகள்

பிரின்ஸ் படத்தின் டிக்கெட் புக்கிங் ஏற்கனவே தொடங்கி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பிரின்ஸ் படத்துடன் கார்த்தியின் சர்தார் மட்டுமே தீபாவளி ரேஸில் இருப்பதால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்நிலையில், இந்தப் படம் மொத்தம் 2 மணி நேரம் 23 நிமிடங்கள் ஓடக் கூடிய வகையில் ரன்னிங் டைம் இருந்தது. ஆனால், படம் முழுவதையும் பார்த்த சிவகார்த்திகேயன், சில காட்சிகள் கதைக்கு தேவையில்லாமல் வேஸ்ட்டாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார்.

12 நிமிட காட்சிகள் கட்

12 நிமிட காட்சிகள் கட்

சமீபத்தில் வெளியான பல படங்களில் ரன்னிங் டைம் அதிகம் இருப்பதாக ரசிகர்களிடம் விமர்சனங்கள் எழுந்தன. மேலும், அதுவே சில படங்களின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தன. இதனால், உஷாரான சிவகார்த்திகேயன், பிரின்ஸ் படத்தில் தேவையில்லாமல் இருந்த 12 நிமிட காட்சிகளை வெட்டி வீசிவிட்டாராம். இப்படியெல்லாம் காட்சிகள் இருந்தால், ரசிகர்களுக்கு போர் அடித்து விடும் என அவர் படக்குழுவை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து தற்போது பிரின்ஸ் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 11 நிமிடங்கள் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதல் பாதி ஒரு மணி நேரம் 7 நிமிடங்கள் 19 நொடிகளும், இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் 3 நிமிடங்கள் 45 நொடிகள் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X