நடிகை சமந்தாவுக்கு விவாகரத்து செட்டில்மெண்ட்டாக இத்தனை கோடிகளா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: விவகாரத்து நடந்தால் நடிகை சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக வழங்கப்படும் தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா விவாகரத்து விவகாரம்தான் கடந்த சில நாட்களாக கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பெரும் பேச்சாக உள்ளது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிறு கதாப்பாத்திரத்தில் நடித்தார் சமந்தா.

தெலுங்கில் லீடிங் ரோல்

தெலுங்கில் லீடிங் ரோல்

இதன்மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகையாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து விண்ணைத் தாண்டி வருவாயா படம் தெலுங்கில் யே மாயா சேசவே என்ற பெயரில் உருவானது. இந்தப் படத்தில் நடிகை சமந்தா லீடிங் ரோலில் நடித்தார். இதன் மூலம் தெலுங்கில் அறிமுகமானார் சமந்தா.

முன்னணி ஹீரோக்களுடன்

முன்னணி ஹீரோக்களுடன்

முதல் படத்திலேயே பெரும் வெற்றியை பெற்று பிரபலமானார் நடிகை சமந்தா. இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதையும் பெற்றார். தொடர்ந்து தமிழில் பானா காத்தாடி, மாஸ்கோவின் காவேரி, நீதானே என் பொன் வசந்தம், நான் ஈ, அஞ்சான், கத்தி, பத்து எண்றதுக்குள்ள, தங்க மகன், தெறி, 24, மெர்சல் இரும்புத்திரை, சீமராஜா, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

காத்து வாக்குல ரெண்டு காதல்

காத்து வாக்குல ரெண்டு காதல்

தற்போது தமிழில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. இதேபோல் தெலுங்கில் ஷாகுந்தலம் என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. நடிகை சமந்தா கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிரபல தெலுங்கு நடிகரும் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கணவரை பிரியும் சமந்தா?

கணவரை பிரியும் சமந்தா?

இந்நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் பிரிய உள்ளதாக தகவல் பரவி வருகிறது. திருமணத்திற்கு பிறகு சமந்தா சினிமாவில் இருந்து விலக வேண்டும் என்றும் அவரது மாமனாரான நாகார்ஜுனா விரும்பியுள்ளார். ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் சமந்தாவின் மார்க்கெட் பீக்கில் சென்று கொண்டிருக்கிறது.

படுக்கையறை காட்சிகளால் பிரச்சனை

படுக்கையறை காட்சிகளால் பிரச்சனை

நடிகை சமந்தாவும் திருமணத்திற்கு பிறகு கிளாமர் போட்டோ ஷூட்டுக்களை நடத்தி வருகிறார். அதோடு சர்ச்சைக்குரிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இது நடிகர் நாகார்ஜுனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. படுக்கையறை காட்சிகளிலும் நடித்து வருகிறார் நடிகை சமந்தா.

சினிமாவில் தொடர உறுதி

சினிமாவில் தொடர உறுதி

இதுதான் பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுகுறித்து நாக சைதன்யாவின் குடும்பத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியும் சமந்தா சினிமாவில் தொடருவதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. இதனை தொடர்ந்தே இருவரும் பிரிய முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜீவனாம்சமாக ரூ.50 கோடி?

ஜீவனாம்சமாக ரூ.50 கோடி?

இந்நிலையில் பெயர் சொல்லப்படாத சில ஆதாரங்கள் தற்போதோ அல்லது தாமதமாகவோ சமந்தா மற்றும் நாக சைதன்யா இடையே விவாகரத்து நடைபெறும் என தெரிவிக்கிறது. மேலும் விவாகரத்து நடைபெறும் நிலையில் ஜீவனாம்சமாக நடிகை சமந்தாவுக்கு 50 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கணவருடன் பிரச்சனையா?

கணவருடன் பிரச்சனையா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகளில் தனது பெயருக்கு பின்னால் இருந்த அக்கினேனியை நீக்கினார். தனது பெயரை வெறும் எஸ் என்று மட்டும் வைத்துக் கொண்டார். இதனால் சமந்தாவுக்கும் அவரது கணவருக்கும் பிரச்சனையா என கேள்விகள் எழுந்தன.

இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி

இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி

சமந்தா நாக சைதன்யா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்து வந்தது. கடந்த காதலர் தினத்தில் கூட நடிகை சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் காதல் கணவர் நாக சைதன்யாவுடன் இருக்கும் போட்டோ ஒன்றை ஷேர் செய்தார். அந்த போட்டோவும் அந்த போட்டோவுக்கு சமந்தா கொடுத்திருந்த கேப்ஷனும் ரசிகர்களை திக்குமுக்காடச் செய்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X