தனுஷை மட்டுமே வைத்து பிரம்மாண்ட ஆக்ஷன் படம்.. ரூசோ சகோதரர்கள் சொன்ன டாப் சீக்ரெட்!

சென்னை: அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் கிறிஸ் எவான்ஸ், ரையான் காஸ்லிங் மற்றும் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள தி கிரே மேன் படத்தின் அட்டகாசமான டிரைலர் சமீபத்தில் வெளியாகி சர்வதேச அளவில் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில், டிரைலர் வெளியீட்டுக்கு முன்னதாக ட்விட்டர் ஸ்பேஸில் பேசிய ஜோ ரூசோ மற்றும் ஆண்டனி ரூசோ நடிகர் தனுஷின் கதாபாத்திரம் மற்றும் அவருக்காக வைத்திருக்கும் சீக்ரெட் பிளான் குறித்து பேசியது தனுஷ் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

நடிகர் தனுஷின் அறிமுக போஸ்டரில் லீத்தல் வெப்பன் என சும்மா பேச்சுக்காக அவர்கள் வைக்கவில்லை என்பதும் படம் வெளியானதும் தனுஷின் கதாபாத்திரத்தை பார்த்து ஒட்டுமொத்த ஹாலிவுட் திரையுலகமே மிரளப் போகிறது என பேசியுள்ளனர்.

ஹாலிவுட்டில் தனுஷ்

ஹாலிவுட்டில் தனுஷ்

பிரெஞ்சு படமான தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர் படத்தில் நடித்த நடிகர் தனுஷ், தற்போது அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் மற்றும் எண்ட்கேம் படங்களை இயக்கிய ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் உருவாகி உள்ள தி கிரே மேன் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் தனுஷ் சைடு ரோலில் தான் நடித்திருப்பார் என இங்குள்ள ஹேட்டர்கள் ட்ரோல் செய்து வந்த நிலையில், ரூசோ சகோதரர்கள் பேசியதை கேட்டு தனுஷ் ரசிகர்கள் ஹேட்டர்களுக்கு தரமான பதிலடி கொடுத்து வருகின்றனர்.

வெறித்தனமான வேட்டைக்காரன்

வெறித்தனமான வேட்டைக்காரன்

உலகளவில் தலைசிறந்த கொலைகாரனாக இந்த படத்தில் தனுஷ் நடித்துள்ளார் என்கிற ரகசியத்தையும் அவரது கதாபாத்திரத்தின் பெயர் ஜேக்கப் தி ஹன்டர் என்றும் கூறியுள்ளனர். 1500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் கிறிஸ் எவான்ஸ் மற்றும் ரையான் காஸ்லிங்கிற்கு அடுத்தபடியான முக்கியத்துவம் தனுஷுக்குத்தான் எனக் கூறியுள்ளனர்.

அவர் நடிப்பு பிடிக்கும்

அவர் நடிப்பு பிடிக்கும்

ரூசோ சகோதரர்கள் இருவருக்குமே தனுஷின் நடிப்பு ரொம்பவே பிடிக்கும் என்றும், அவரது வெறித்தனமான நடிப்புக்கு ரசிகரான காரணத்தினால் தான் இந்த கதாபாத்திரத்தை இப்படி வடிவமைத்துள்ளனர் என்றும், இந்த படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வேறு ஒரு மேஜிக்கும் விரைவில் நடக்கும் என எதிர்பார்க்கலாம் என கூறியதும் ட்விட்டர் ஸ்பேஸில் அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த தனுஷ் ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமானது.

தனிப்படம்

தனிப்படம்

ஒவ்வொரு அவெஞ்சர்ஸ்க்கும் தனித்தனி படங்கள் வெளியான நிலையில், தனுஷின் கதாபாத்திரத்திற்கு மட்டுமே ஒரு தனிப்படத்தை உருவாக்கவும் ரூசோ சகோதரர்கள் முடிவு செய்திருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும், தி கிரே மேன் படத்தில் தனுஷுக்கு இரண்டு அட்டகாசமான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் உள்ளன என்றும் கூறி ரசிகர்களுக்கு கூஸ்பம்ப்ஸ் வரவைத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X