தனுஷின் ஜகமே தந்திரம் பார்த்து விட்டு கருத்து சொன்ன ரூசோ பிரதர்ஸ்...ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சென்னை : கோலிவுட், பாலிவுட்டை தொடர்ந்து தனது முதல் ஹாலிவுட் என்ட்ரியாக தி கிரே மேன் படத்தில் நடித்து முடித்தார் தனுஷ். இந்த படம் சமீபத்தில் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. நெட்ஃபிளிக்ஸ் தயாரித்த இந்த படத்தில் தனுஷ் கெஸ்ட் ரோலில் தான் நடித்திருந்தார்.

Ryan Gosling and Chris Evans உள்ளிட்டோர் நடித்த தி கிரே மேன் படத்தில் கொலைகாரன் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தின் ரிலீசை முன்னிட்டு தி கிரே மேன் படத்தை இயக்கிய ரூசோ பிரதமர்ஸ் ( ஆண்டனி மற்றும் ஜியோ ருசோ) இந்தியா வந்திருந்தனர்.

தனுஷின் நடிப்பை டைரக்டர் பெரிய அளவில் பாராட்டினார். இந்நிலையில் சமீபத்தில் தி கிரே மேன் 2 எடுக்கப்பட உள்ளதாகவும், தனுஷிற்கென தனியாக ஒரு கதையை தனியாக உருவாக்க உள்ளதாகவும் ரூசோ பிரதமர்ஸ் கன்ஃபார்ம் செய்திருந்தனர்.

 ஜகமே தந்திரம் பார்த்த ரூசோ பிரதர்ஸ்

ஜகமே தந்திரம் பார்த்த ரூசோ பிரதர்ஸ்

இந்த சமயத்தில் தற்போது ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் நடிப்பு பற்றி பேசி உள்ள ரூசோ பிரதர்ஸ், தனுஷிற்கு என்ன காரணத்திற்காக தி கிரே மேன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தோம் என்பதையும் ஓப்பனாக சொல்லி உள்ளனர்.

தோல்வி அடைந்த தனஷ் படம்

தோல்வி அடைந்த தனஷ் படம்

டைரக்டர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ஜகமே தந்திரம். இந்த படத்தில் தனுஷ், சுருளி என்ற கேரக்டரில் மதுரை கேங்ஸ்டராக நடித்திருந்தார். படத்தின் ரிலீசிற்கு முன்பே இந்த படத்தின் பாடல்கள் செம ஹிட்டாகின. ஆனால் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் தோல்வி அடைந்தது.

 தி கிரே மேன் சான்ஸ் தனுஷிற்கு ஏன்

தி கிரே மேன் சான்ஸ் தனுஷிற்கு ஏன்

இந்த நிலையில் ஜகமே தந்திரம் படத்தில் தனுஷின் நடிப்பை பாராட்டிய ரூசோ பிரதர்ஸ், தி கிரே மேன் படத்தில் தனுஷ் எப்படி தேர்வு செய்யப்பட்டார் என்பதை பற்றி தெரிவித்தனர். அதில், வேகம் மற்றும் உதைப்பது போன்றவற்றில் Ryan Gosling and Chris Evans ஆகியோருக்கு இணையான ஒருவர் தான் எங்களுக்கு தேவைப்பட்டார்.

உலகத்திலேயே அவரால் மட்டும் தான் முடியும்

உலகத்திலேயே அவரால் மட்டும் தான் முடியும்

எங்களுக்கு தெரியும் அந்த வேலையை செய்ய உலகத்திலேயே தனுஷால் மட்டும் தான் முடியும்.தி கிரே மேன் படத்தில் பணியாற்றுவதற்கு முன்பே நாங்கள் தனுஷின் மிகப் பெரிய ரசிகர்கள். தி கிரே மேன் படத்தில் அந்த குறிப்பிட்ட ரோலில் தனுஷ் நடித்தால் தான் பெர்ஃபெக்டாக இருக்கும் என நாங்கள் நினைத்தோம்.

master of movement தனுஷ்

master of movement தனுஷ்

ஜகமே தந்திரம் படத்தில் தனுஷ் நடித்த சில காட்சிகளை பார்த்த பிறகு தனுஷ், master of movement என உணர்ந்தோம். அதை அந்த படத்தில் நீங்களை பார்க்க முடியும். அதை தி கிரே மேன் படத்திலும் நீங்கள் பார்க்க முடியும். டான்ஸ், ஃபைட் என இரண்டிலும் ஒரே மாதிரி சர்ப்ரைஸ் கொடுத்தார் அவர்.

 பிரமிக்க வைத்த தனுஷ்

பிரமிக்க வைத்த தனுஷ்

நீங்கள் நம்புவீர்களா, இல்லையா என்று கூட தெரியவில்லை. டான்ஸ், ஃபைட் இரண்டும் ஒரே மாதிரி தனுஷ் செய்வது பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும்.ஆனால் அது எப்படி கவரும் வகையில் உள்ளது என்பது அவருடன் பணியாற்றிய பிறகு தான் தெரிந்தது. அந்த சீனில் அவர் மிகப் பெரிய ஆற்றலை வெளிப்படுத்தி இருந்தார். கேமிராவில் பார்த்து பிரமித்து போனோம்.

மீசை கூட ஸ்பெஷல் தான்

மீசை கூட ஸ்பெஷல் தான்


ஜகமே தந்திரம் படத்தில் அவரது மீசை கூட தனித்துவமாக இருந்தது. அவர் நடிக்கும் கேரக்டராகவே அவர் மாறி விடுகிறார். அவர் கைகளை அசைக்கும் விதம் உள்ளட்டவைகள் தான் அந்த கேரக்டருக்கு பொருத்தமாக இருந்தன. ஒரு நடிகராக அது மிகவும் கஷ்டம். ஆனால் அதை வெளிக்காட்டாமல் மிகவும் சாதாரணமாக, வேடிக்கையாக செய்துள்ளார் என்றனர்.

Recommended Video

Anirudh ரசிகர்கள்லாம் கை தூக்குங்க, கோவையில் இசை விருந்து *Kollywood
தனுஷ் என்ன சொன்னார்

தனுஷ் என்ன சொன்னார்

ரூசோ பிரதர்ஸ் ஜகமே தந்திரம் படத்தை பாராட்டி உள்ளதை பார்த்து விட்டு, Wow that's a pleasant surprise.Thank you so much Russo Brothers.. This means a lot to our Jagame thandiram team என பதில் போஸ்ட் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X